districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை

சேலம், ஜூலை 27- குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, காவல்துறையினரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  சேலம் மாநகரில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்து கொண்ட நபர் களை கட்டுபடுத்துவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்தொடர்ச்சியாக, சேலம் மாநகர காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 15 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்யப்பட்டனர். மேலும், குற்றவழக்குகளில் சம்பந்தப் பட்ட 107 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப் பட்டுள்ளனர். சேலம் மாநகரில் உள்ள ரவுடிகளை, சரக உதவி ஆணை யாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து இனிவரும் காலங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடகூடாது என்றும், அவ்வாறு ஈடு பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  எச்சரிக்கைப்பட்டனர். மேலும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தங்களை அணுகுமாறும் காவல்துறை அதிகாரிகளால் அறிவுரை வழங்கப்பட்டன.

நிழற்குடை இல்லாததால் பரிதவிப்பு

பென்னாகரம், ஜூலை 27- பென்னாகரத்தில் நிழற்குடை இல்லாத தால் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட் டோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசினர் மகளிர்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த  1600க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரு கின்றனர். இப்பகுதியில் அரசினர் தொடக் கப்பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், காவல்  நிலையம், மகளிர் காவல் நிலையம், வாரச்  சந்தை, பத்திரப்பதிவு அலுவலகம்,  வங்கி  உட் பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால், இப்பகுதிக்கு தினந்தோறும் ஆயி ரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் பேருந்துக்காக பள்ளி மாணவ, மாணவிகள் சாலைகளின் இரு புறமும் காத்திருக்கின்றனர். மேலும் வெயில்  மற்றும் மழை காலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையில் காலை, மாலை நேரங்களில் மக்கள் நெரிச்சல் மிகுதியாக உள்ளன.   எனவே பொதுமக்கள், பள்ளி மாணவி களின் நலன் கருதி இப்பகுதியில் நிழற்குடை  அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ் சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் பென்னாகரம் பேரூராட்சியில்  உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக பேருந்து  நிறுத்தம்,  முள்ளுவாடி பேருந்து நிறுத்தம், காவல் நிலைய பேருந்து நிறுத்தம், போடூர்  நான்கு ரோடு பேருந்து நிறுத்தம், நாகமரை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நிழற்குடை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

தருமபுரி, ஜூலை 27- வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள  சந்தன மரங்களை வெட்டி கடத்தப்பட் டுள்ளது.  தருமபுரி மாவட்டம், அரூர் வனசரக அலுவல வளாகத்தில் மாவட்ட வன அலுவ லர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில், கடந்த 20ஆம் தேதியன்று இரவு நேரத்தில் இருந்த ஆறு சந்தன மரங்களை அடை யாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, அரூர் வனத் துறையினர் தனிப்பிரிவு, காவல் காவல் துறையினர் சந்தன மரங்கள் வெட்டியவர் கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஓசூரிலிருந்து மோப்ப நாயை  வரவழைக்கப்பட்டு, சந்தன மரங்கள் வெட் டப்பட்ட இடத்திலிருந்து செக்கம்பட்டி கிரா மப்பகுதிகளில் மோப்பநாய் தடயங்களை தேடி சென்றது. இதையடுத்து, மோப்ப நாய் சென்ற பகுதி களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை வனத்துறை மற்றும் காவல் துறையினர்  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை, ஜூலை 27- பாலியல் வன்கொடுமையை தடுக்கத் தவறிய மணிப்பூர்  அரசைக் கலைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். மணிப்பூர் மாநில பழங்குடியின பெண்கள் மீது பாலியல்  வன்கொடுமைகள் செய்தவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையை தடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில பாஜக அரசைக் கலைக்க  வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உடுமலை மத்திய பேருந்து  நிலையம் அருகில் புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி  ஆர்ப் பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  உடுமலை நகர காங்கிரஸ் குழு  தலைவர்  ரவி தலைமை ஏற்றார். தமிழ்நாடு செயற்குழு உறுப் பினர் கோவிந்தராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர் லோக நாதன், பலராமன், செய்தி தொடர்பாளர் சதிஸ்குமார், முரு கன் உள்ளிட்ட திரளானோர் கலத்து கொண்டனர்.

காங்கயத்தில் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

திருப்பூர், ஜூலை 27 - காங்கேயம் நகர பேருந்து நிலையத்தில் திங்களன்று ஒன் றிய பிஜேபி மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள்  விரோத, விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாபெரும் பிரச்சார  இயக்கம் நடைபெற்றது. எச் எம் எஸ் நிர்வாகி முருகன் தலைமை ஏற்றார். சிஐடியூ  சார்பில் தங்கவேல், ராமநாதன், எல்பிஎப் நிர்வாகி சோம சுந்தரம், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி ஆகி யோர் கண்டன உரை ஆற்றினர். சிஐடியு நிர்வாகி காளிராஜ்  நன்றி கூறினார்.

பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய சான்றிதழ் வழங்கியதாக புகார்

சூலூர், ஜூலை 27- கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மகி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மூன்றாண்டு கள் பட்டயம், இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முது கலை பரதநாட்டிய பட்டய படிப்புகள் பாரதியார் பல்கலை  அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாக நாட்டிய பள்ளி சார்பில்  விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி பலர் இந்த பரத நாட்டிய படிப்புகளில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர். இந் நிலையில், கோவை மாவட்டம், கணியூரைச் சேர்ந்த சக்தி வேல் என்பவரது மகளும், இங்கு நாட்டிய பள்ளியில் பட்டயம் (டிப்ளமோ) முடித்த நிலையில், அரங்கேற்றம் செய்ய நாட்டிய பள்ளி நிர்வாகம் ரூ.3 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந் நிலையில், வியாழனன்று மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நாட்டியப் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மாணவியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மாணவியின் தந்தை சக்திவேல் பேசுகையில், பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாடு  காரணமாக எனது மகளை இப்பள்ளியில் (மகி கலாசேத்ரா) சேர்த்தேன்‌. பட்டயப்படிப்பு என்ற பெயரில் 3 பருவ தேர்வுகள் நடத்தி பாரதியார் பல்கலைக்கழக பெயருடன் சான்றிதழ்கள் கொடுத்திருக்கின்றனர்‌. இதுகுறித்து பாரதியார் பல்கலைக் கழகத்தை அணுகி கேட்டபோது, 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது போன்ற பட்டயப்படிப்புகளுக்கு பாரதியார் பல்கலைக் கழகம் சார்பில் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து நாட்டிய பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, எந்த வித முறையான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அரங் கேற்றத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போதும், அதை கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே,  எனது மகளுக்கு நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து போலீசிலும் புகார் தெரிவித்துள்ளோம், என்றார்.

வார இறுதியில் கூடுதல் பேருந்துகள்

கோவை, ஜூலை 27- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலத் தின் சார்பில் வெள்ளியன்று (இன்று) ஆடி வெள்ளி, சனியன்று  (நாளை) மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு ஏற்க னவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுத லாக 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆர்‌.வி.எஸ் கல்லூரியில் சர்வதேச மருந்தியல் கருத்தரங்கம்

சூலூர், ஜூலை 27- சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரியில் நடைபெற்று வரும் சர்வதேச மருந்தியல் கருத்தரங்கில் சவுதி அரேபியா மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று மருந்தியல் ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்து மாணவர்களிடையே விளக்கிப் பேசினர். கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ் பாரா மெடிக்கல் கல்லூரியில் 2 நாள் சர்வதேச மருந்தியல் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நீலமணி தங்கவேல், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வசந்த் நாதன் ஆகியோர் கலந்து கொண்டு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி குறித்து கல்லூரி மாணவர்களிடையே விளக்கி பேசினர். முன்னதாக, ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் செந்தில் கணேஷ் பேசுகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருந்தியல் வல்லுநர்கள் முக்கிய பங்காற்றினர். உலகத்துக்கான தடுப்பூசி மற்றும் உயர் தர மருந்து தயாரிக்கும் சந்தர்ப்பங்களில் மருந்தியல் வல்லுநர்கள் எப்போதுமே உயர்ந்துள்ளனர். மருந்து மற்றும் ஊட்டச்சத்து துறைக்கு மென்பொருள் வசதிகளுடன் தொழில் பூங்கா உள்ளிட்ட வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். உலகின் மருந்தகமாக, இந்திய மருந்தியல் தொழில் உருவெடுக்கும் என நம்பிக்கை உள்ளது. மருந்தியல் துறையை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிகள் மற்றும் இதர திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

கொல்லிமலையில் கரடி தாக்குதல்: விவசாயிகள் படுகாயம்

நாமக்கல், ஜூலை 27- கொல்லிமலையில் விவசாயிகளை கரடி தாக்கிய நிலையில், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங் குகிறது. கொல்லிமலையில் நம் அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற் றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, செம்மேடு வியூ பாயிண்ட் அருகே கரடி ஒன்று உணவு தேடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலானது. இந்நிலையில், செம்மேடு அருகே உள்ள கரையங்காடு பகுதியில் வசிக்கும் காளி (60) மற்றும் பழனிச்சாமி (50) ஆகிய இருவரும் விவ சாய வேலைக்கு சென்றுள்ளனர். அப் போது அங்கு மறைந்திருந்த கரடி ஒன்று எதிர்பாரத நேரத்தில், விவசாயிகளை தாக்கிவிட்டு காட்டிற்குள் ஓடி மறைந் தது. விவசாயிகளின் அலறல் சத்தம்  கேட்டு அங்கு ஓடி வந்த ஊர் பொதுமக் கள் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த விவசாயிகளை மீட்டு, கொல்லி மலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லிமலை, செம்மேட்டிலி ருந்து முக்கிய சுற்றுலா தலமான தாவர வியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகு திகளுக்கு செல்லக்கூடிய வழியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, வனத்துறையினர் கரடியை கூண்டு  வைத்து பிடித்து, அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என அப்பகுதி விவசாயி களின் கோரிக்கை வலுத்து வருகிறது.

கலப்படம் செய்யப்பட்ட 3,740 கிலோ அப்பளம் பறிமுதல்

சேலம், ஜூலை 27- சேலத்தில் கலர் கலப்படம் செய்யப்பட்ட 3,740 கிலோ அப்பளங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம் மற்றும் கந்தம்பட்டி பகுதிகளில் உள்ள அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில், அதி களவில் கலர் சாயம் பூசப்பட்டு தயாரித்து விற்பனை செய்யப் படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவர் கதிரவன் தலைமையிலான குழுவினர் சிவதா புரம் பகுதியில் உள்ள ருத்ரா ட்ரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அதிக நிறம் கலந்த 300 கிலோ குழல் அப்பளம் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கந்தம்பட்டி பகுதியில் உள்ள சீனிவாசா ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் 3,440 கிலோ செயற்கை நிறம் கலந்த குழல் அப்பளம் கண்டறியப்பட்டது. உடனடியாக அனைத்து அப்ப ளங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 50 ஆயி ரம் எனவும், இந்த உணவு மாதிரியின் ஆய்வறிக்கை வந்தவு டன் உணவு பாதுகாப்பு சட்டத்தின் மேல் இரண்டு நிறுவனங் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.


 

 

 

 

;