திருப்பூர், டிச.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டத்தின் எதிரொலி யாக திருப்பூரில் சாலையை சீர மைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் செட்டிபாளையம் ரிங் ரோடு முதல் கூத்தம்பாளை யம் பிரிவு வரையில் குண்டும், குழி யுமாய் உள்ள சாலையை உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் மக்களைத் திரட்டி சனியன்று நாற்று நடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதைய டுத்து, திருப்பூர் மாநகராட்சி முத லாவது மண்டல உதவிஆணையர் ஏ.சி.சுப்பிரமணியம், உதவிப் பொறியாளர் பிரபாகரன், சுகா தார அலுவலர் ராமச்சந்திரன், மற் றும் சண்முக வடிவேல் ஆகியோர் நேரடியாக போராட்டம் நடைபெ றும் பகுதிக்கு வருகை தந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப் பன், ஒன்றிய குழு உறுப்பினர் கோபால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஸ்குமார், விஜயபுரி கார்டன் கிளைச் செயலாளர் இம்ரான் பாஷா மற்றும் அப்பகுதி பொது மக்களும் அதிகாரிகளுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஐந்து நாட்களுக் குள் சரி செய்து கொடுப்பதாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி கூறினர். எனவே போராட் டம் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டது. இந்நிலையில் உடனடியாக ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி முழு வீச்சில் நடைபெற் றது. அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கைகளான, செட்டிபாளையம், குமரன் காலனி, கூத்தம்பாளையம், அண் ணையபாளையம், ஒட்டபாளை யம் பகுதிகளை இணைத்து மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து தரு வதாகவும், பாதாள சாக்கடை திட் டப் பணியை விரைந்து முடிப்பதா கவும், அம்ருத் திட்டக் குடிநீர் குழாய் விடுபட்ட இடங்களில் முழு மையாக அமைத்துத் தருவதாக வும், மழைக் காலங்களில் மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைத்து கொடுப்பதாகவும், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து உடனடி யாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய் வதாகவும் மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பொது மக்களின் அடிப்படையான இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன் கூறினார்.