districts

img

மாற்று பாலினத்தவருக்கான புறநோயாளிகள் பிரிவு

கோவை, மார்ச் 29- கோவை அரசு மருத்துவமனை  வளாகத்தில் திருநங்கை, திரு நம்பி உள்ளிட்ட மாற்று பாலினத்த வருக்கான தனி புறநோயாளிகள் பிரிவு புதனன்று திறக்கப்பட்டது.  கோவை அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனைக்கு நாள் தோறும், உள்நோயாளிகள்  மற்றும்  புறநோயாளிகள் என 6 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச் சைக்காக வருகின்றனர். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின் றனர்.  தலைவலி என்று போனாலே  ஆயிரக்கணக்கான ரூபாய் களை பறிக்கும் தனியார் மருத்துவ மனைகள் புற்றீசல் போல பெருகி விட்ட நிலையில் ஏழை, எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்கிற இடமாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்தால் மட்டும் போதும், அரசு மருத்துவமனையை ஒரு வரும் குறை சொல்ல முடியாது. தனியார் மருத்துவமனையை காட்டிலும் கூடுதல் கட்டமைப்பு  வசதிகள், மற்றும் நவீன உபகர ணங்களை கொண்டு செயல்படுகிற மருத்துவமனையாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்பதால், இதயம், சிறுநீரகம், மகப்பேறு, பெண்கள் நலன்; எலும்பு முறிவு,  பொது மருத்துவம், காது, மூக்கு,  தொண்டை, கண், குழந்தைகள் நலன் என பல்வேறு துறைகளில்  நவீன சிகிச்சைகள் அரசு மருத்து வமனையில் மேற்கொள்ளப்பட்டு, பல சாதனைகளையும் புரிந்து வரு கிறது. இதன் அடுத்த கட்டமாக மாற்றுப்பாலினத்தவருக்கான புற நோயாளிகள் சிறப்பு தனிப்பிரிவை அரசு மருத்துவமனையில் உரு வாக்கப்பட்டுள்ளது.  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் ஆண்கள், பெண்கள் என புற நோயாளிகள் பிரிவு செயல் பட்டு வருகிறது.

மாற்று பாலினத்த வருக்கான, மருத்துவ தேவை களுக்கு, தனியாக புறநோயாளி கள் பிரிவு இல்லாமல் இருந்தது.  இதனால், ஒவ்வொரு பிரிவாக  செல்ல வேண்டிய நிலை இருந்த தால் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். மாற்று பாலினத்தவ ருக்கு தனிப்பிரிவு துவக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ந்து எழுந்து வந்தது. இதனையேற்று தமிழ்நாடு அரசு மாற்று பாலினத்தவருக்கான மருத்துவ சேவைக்காக, புறநோ யாளிகள் பிரிவாக தனிப்பிரிவு புதனன்று துவக்கப்பட்டது. கோவை அரசு மருததுவ கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த தனிப் பிரிவை, மருத்துவக் கல்லூரியின்  மருத்துவமனையின்  முதல்வர் ஏ.நிர்மலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இதுகுறித்து அரசு மருத்து வமனை முதல்வர் ஏ.நிர்மலா கூறு கையில், மாற்றுபாலினத்தவருக் கான புறநோயாளிகள் பிரிவு காலை 10 மணி முதல் மதியம் 2  மணி வரை செயல்படும் எனவும்,   மேலும், தீவிர சிகிச்சைகளுக்கு அந்தந்த சிறப்பு துறைகளில் தனி  படுக்கைகள் கொடுத்து கவனிக்கப் படும். இதனை அனைத்து திரு நங்கைகள், திருநம்பிகளாக உள்ள  மாற்றுப்பாலினத்தவர்கள் தங்க ளுடைய மருத்துவ நோய் குறை களை தீர்க்க கட்டணமில்லாமல்  பயன்படுத்திக் கொள்ளலாம் என  தெரிவித்துள்ளார்.