திருப்பூர், செப். 22 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவரும், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் பொதுச் செயலாளரு மான பொதுவுடைமை சிந்தனையாளர், மூத்த தோழர் செ.நடேசன் நினைவேந் தல் நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற் றது. ஆசிரியர் நடேசன் கடந்த 17ஆம் தேதி காலமானார். அவரது நினை வேந்தல் நிகழ்ச்சி தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில் புதன்கிழமை திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செ.நடேசனின் பணி கள், பன்முகத் திறமைகள் குறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், கிட்ஸ் கிளப் பள்ளித் தாளாளர் மோகன் கார்த்திக், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ்டியன், பு.இ.மு நிர்வாகி தமிழமுதன், கலை இலக்கிய பெரு மன்ற மாவட்டத் தலைவர் பி.ஆர்.நட ராஜன், பின்னல் புக் டிரஸ்ட் அ.நிசார் அக மது, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், தளிர் பதிப்பகம் ரத் தினமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் மன் றம் ஆசிரியர் சிவகாமி, எழுத்தாளர் அரு ணாசலம், கவிஞர் பாடகர் து.சோ.பிரபா கரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி எம்.சி., வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் செ.மணிகண்டன் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உரை யாற்றினர். நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் எம்.ஜீவானந்தம், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன், திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ச.பழனிச்சாமி, தாய்த்தமிழ் பள்ளி தாளாளர் கு.ந.தங்கராசு, பாரதி சுப்பராயன், தமிழ்ச் சங்கம் முத்துபாரதி உள்பட பல்வேறு கலை இலக்கிய, ஆசி ரியர் மற்றும் பொதுநல அமைப்புக ளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவாக அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.