districts

img

மார்க்சிய அறிஞர் தோழர் தேவ.பேரின்பன் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, செப்.17- மார்க்சிய அறிஞர் தோழர் தேவ.பேரின் பனின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு, தருமபுரி கரடிகுன்றில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று அஞ்சலி செலுத்தி னர். ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வும், ஒகேனக்கல் நீர்மின்திட்டம்‌ நிறைவேற்ற வேண்டும் என பலகட்ட போராட்டங்களை முன் நின்று நடத்தியவர், குத்தகை விவசாயிக ளுக்கு நிலம் பெற்று தந்தவர், ஜமீன்தாரரிடம் இருந்து நிலத்தை மீட்டு மக்களுக்கு வழங்க போராடியவர், பின்தங்கிய தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டவர் தோழர் தேவ. பேரின்பன் ஆவர்.   இடதுசாரி அரசியலை  முன்னெடுக்க பாடுபட்டவர், தத்துவார்த் துக்கு மிகப்பெரிய பங்களிப்பு செலுத்தி அதற்கு அடையாளமாக வாழ்ந்தவர்.  அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம், தொல்லியல், மானுடவியல் என அனைத்து துறைகளிலும் வல்லமை பெற்று  முத்திரை பதித்த தோழர் தேவ.பேரின்பனின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட் டது.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கரடிகுன்றில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நினை வஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின் நடை பெற்ற நினைவஞ்சலி கூட்டத்திற்கு பகுதிக் குழு செயலாளர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, வி.மாதன், ஆர்.சிசுபாலன், ஆர்.மல் லிகா, மூத்த தலைவர்கள் பி.இளம்பரிதி, ஜி. வெங்கட்ராமன், இடைகமிட்டி செயலாளர் கள் தருமபுரி என்.கந்தசாமி, சின்னம்பள்ளி ஆர்.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி.எஸ்.ராமச்சந்திரன், செல்லன், ஜி.நக் கீரன், ஆர்.கே.பெருமாள், முகிலன், லோக நாதன், கே.பூபதி, ஏ.ஜெயா, மாதர் சங்க நிர் வாகிகள் பி.ராஜமணி, தமிழ்மணி, ரங்க நாயகி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அருள், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாம்

இதைத்தொடர்ந்து தோழர் தேவ.பேரின் பனின் நினைவு தின ரத்ததான முகாம் வாலி பர் சங்கம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதனை மருத்துவர் சக்திவேல் துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.அருள், பகுதிக்குழு தலைவர் எம். சிலம்பரசன், செயலாளர் எம்.மணிகண்டன், பொருளாளர் எம்.மூர்த்தி, ரத்த வங்கி அலு வலர் பிரியா ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் உதிர தானம் செய்தவர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
 

;