districts

img

தோழர் பி.குருசாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், அக். 7 - திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினரும்,  சிஜடியு தையல் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டத்  தலைவருமான பி.குருசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு  தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. வடக்கு ஒன்றியம் ஆத்துப்பாளையம் கட்சிக் கிளை அலு வலகம் முன்பாக நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எ.சந்தோஷ் தலைமை வகித்தார்.  கிளை செயலாளர்கள் சங்கர், கீதாலட்சுமி, பாண்டியன், ஒன் றிய குழு உறுப்பினர் என்.கோபால், திருப்பூர் மாவட்ட பஞ் சாலை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.பழனிச் சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், கட்சியின்  ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், முன்னாள் கவுன்சி லர் கேட்டா பாலு, கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பி.குருசாமியின் பணி களை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.

;