districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு 

தருமபுரி, செப்.21- தருமபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்கரை ஊராட்சி குரும்பட்டியில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யா லயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாவட்ட  ஆட்சியர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் முதல்வர் ஜெயச் சந்திரன் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.  இதையடுத்து, தருமபுரி நகராட்சி, மதிகோன்பாளை யத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார். முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப் பட்டுள்ளதா?, அரசு வழங்கக்கூடிய அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அரசின் சலுகைகள்  அனைத்தும் முழுமையாக கிடைக்கின்றதா? என்பதை கேட்டறிந்தார்.

சேலம்: 28 இடங்களில் காய்ச்சல் முகாம்

சேலம், செப்.21- சேலம் மாநகராட்சி பகுதியில் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதை  கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடை பெற்றது. சேலம் மாநகராட்சி பகுதியிலுள்ள 16 நகர்ப்புற ஆரம்ப  சுகாதார நிலையங்களிலும், பள்ளிகளில் 8 முகாம்களும், பொது இடங்களில் 4 முகாம்கள் என மொத்தம் 28  முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம் பணியில்  150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முகாமில் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருந் தால் தேவையான மருந்து மாத்திரைகள் முகாமிலேயே வழங்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. அஸ்தம்பட்டி மண்டலம், மணக்காடு காமராஜர் நகர பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு  காய்ச்சல் முகாமில் மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இதில், துணை மேயர் சாரதாதேவி, மாநகர நல அலுவலர் யோகானந், மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர் பாலு, கவுன்சிலர் சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளியிடம் கந்து வட்டி கேட்ட வாலிபர் மீது வழக்கு

கோவை, செப்.21-  மாற்றுத்திறனாளியிடம் கந்துவட்டி கேட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (47). மாற்றுத்திறனாளியான இவர்  கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் அன் னூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு  பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து வட்டிக்கு கடன்  வாங்கினேன்.  அதற்கான வட்டியை 6 மாதம் நான் சரியாக செலுத்தி வந்தேன். பின்னர் கொரோனா காலகட்டத்தில் என்னால் வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயராமன் எனக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து நான் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி அவருக்கு ரூ.4.80 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர் அந்த பணத்தை பெற்று கொண்டு எனது வீட்டு பத்திரத்தை திருப்பி தரவில்லை. மேலும், ரூ.80 ஆயிரத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கூறிவிட்டார். பலமுறை வீட்டு பத்திரத்தை கேட்டும் அவர் தரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்  குறை தீர்ப்பு முகாம் அன்று மண்ணெண்ணை கேனுடன் சென்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். அப்போது என்னை போலீசார் காப்பாற்றி ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனர். ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அன்னூர் போலீசார் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆ.ராசா எம்.பி.,க்கு மிரட்டல் - பாஜக தலைவர் கைது

கோவை, செப்.21- மநுவில் உள்ளதை கூறிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற இந்து முன் னணியின் ஆர்ப்பாட்டத்தில், ஆ.ராசா வையும், திமுகவையும் தகாத  வார்த்தைகளில் பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறை யினர் கைது செய்தனர். திமுகவின் துணை பொதுச்செயலா ளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னருமான ஆ.ராசா கட்சியின் பயில ரங்கு கூட்டத்தில் மநு நூலில் உள்ள வற்றை மேற்கோள் காட்டி பேசியி ருந்தார். இது இந்துக்களை இழிவு படுத்தியதாகக்கூறி சங்பரிவார அமைப் புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத  நடவடிக்கை பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இதனை திசைதிருப்பவே ஆ. ராசாவின் பேச்சை பூதாகரமாக்கி சட்டம்  ஒழுங்கை சீர்குலைத்து வருகிறார்கள் என அரசியல் நோக்கர்கள் வெளிப் படையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பீளமேட்டில் கடந்த ஞாயிறன்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில்  கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறை யினர் பாதுகாப்பு இல்லாமல் கோவை யில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க் கிறேன். திமுககாரனும் வாங்காட பார்க்கலாம். இந்து சனாதன தர்மத்தை  உடைக்கிறேன்; மயிரை உடைக்கிறேன் என்கிறார்கள். எவனாவது வந்தால் பிஞ்ச செருப்பால் அடிப்பேன்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த  பகிரங்க மிரட்டல் சமூக வலைதளங் களில் வைரலானது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தினர் தந்தை பெரியார் குறித்தும், தமிழக முதல்வர் குறித்து இழிவாக பேசியதோடு, பகிரங்க மிரட்டல் கொடுத்த பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம் ராமசாமி மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர்.  இதனையடுத்து புதனன்று காலை பீளமேடு காவல் துறையினர் பாலாஜி  உத்தம ராமசாமியை கைது செய்தனர். முன்னதாக, மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு  குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவிநாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். இதனையடுத்து சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர். இதன்பின், மருத்துவ பரி சோதனைக்கு பிறகு பாலாஜி உத்தம  ராமசாமி கோவை ஜே.எம்.2 நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் மீது இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக பேசுதல் (153 ஏ) மற்றும் ஐ.பி.சி 504,  505 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நிதிபதி செந்தில், பாலாஜி உத்தம ராம சாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்  விதித்து உத்தரவிட்டார். இதனை யடுத்து அவர் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

விவசாய திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் நில ஆவணங்களை சமர்பிக்க நாளை கடைசிநாள்

தாராபுரம், செப். 21 -   தாராபுரம் பகுதியில் பிரதமர் விவசாய பயிர் காப்பீட்டு திட் டத்தில் பயன்பெறும் விவசாயிகள் நில ஆவணங்களை சமர் பிக்க வெள்ளிகிழமை கடைசிநாள் என வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கே. லீலாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமரின் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் பெறும் திட்டத்தில் சென்ற மாதம்  வரை 11 தவணைகள் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அடுத்த தவணை வழங்க பயனாளிகளின் நில உடைமைகள் சரிபார்க் கபட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களின் நில உட மைக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், புகைப்படம் 1  ஆகிய ஆவணங்களை நாளை 23 ஆம் தேதிக்குள் தங்களின்  கிராம சரிபார்ப்பு பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவ லர்களிடம் அணுகி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதன் படி அலங்கியம், தளவாய்பட்டிணம், ஊத்துப்பாளையம், காங்கயம்பாளையம், செலாம்பாளையம் வருவாய் கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த வேளாண் உதவி அலுவ லர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

சுமைத்தொழிலாளி கொலை வழக்கு நால்வருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், செப். 21 - திருப்பூரில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. திருப்பூர் வாலிபாளையம் துகில் இம் பெக்ஸ் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழி லாளியாக வேலை செய்து வந்தவர் காஜா மைதீன் (58), கடந்த 2020ஆம் ஆண்டு நவம் பர் 14ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் நீண்ட  நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந் தது.  இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி  காலை அவர் வேலை செய்த நிறுவனத்திற்கு  சென்று பார்த்தபோது ஒரு அறையில் அவர்  இறந்து கிடந்தார். இது தொடர்பாக வடக்கு  காவல் நிலையத்தார் பிரேதத்தைக் கைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரி யவந்தது.  இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு  செய்து காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். புதுக்கோட்டை மாவட் டம் திருமலை ராயசமுத்திரம் மேட்டுப்பட் டியைச் சேர்ந்த பழனிச்சாமி (26), ஆலங்குடி  முருகேசன் (25), மேட்டுப்பட்டி சக்தி கணேஷ்  (23), திருமலை ராயசமுத்திரம் கார்த்தி (25)  ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை  தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி பழனிச்சாமி,  முருகேசன், சக்தி கணேஷ், கார்த்தி ஆகிய  நால்வரும் குற்றவாளிகள் என உறுதி செய் யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாரதிபுரம் பள்ளிக்கு 25 இருக்கைகள் நன்கொடை

திருப்பூர், செப். 21 - இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பள்ளிக்கு 25 இருக்கைகள்  நன்கொடையாக வழங்கப்பட்டது. திருப்பூர் ஒன்றியம் இடுவாய்  ஊராட்சி பாரதிபுரம் நடுநி லைப் பள்ளியில் புதன்கிழமை  இந்த இருக்கைகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சின்ராஜ் தனது சொந்த செலவில் பாரதிபுரம்  பள்ளிக்கு 25 இருக்கைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இடுவாய்  ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன், மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி,  இடுவாய் ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.பரமசி வம், பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்ரமணி யன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கு உதவி செய்த சின்ராஜூக்கு சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் விஐபி நகர்  சுரேஷ், இடுவாய் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்  தலைவர் மௌனசாமி, முத்துவேல், ரவி, குமார், பிரபாகரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழா நிறைவாக ஏற்புரை ஆற் றிய சின்ராஜ், பள்ளிக்குத் தேவைப்படும் உதவிகளை முடிந்த  அளவு செய்து தருவதாகவும் உறுதியளித்தார். மாணவர்கள்,  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், செப். 21 - பல்லடம் ஒன்றிய பகுதி யில் புளியம்பட்டி, மாணிக் கபுரம், வலையபாளையம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் பள்ளி, கல்லூ ரிக்கு செல்கின்றனர். எனவே  இந்த வழித்தடங்களில் இயக் கும் பேருந்துகளை முறை யாக பள்ளி நேரங்களில் இயக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பல்லடம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.பரமசிவம் அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

தாராபுரம், செப் - 21 தாராபுரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர்கள் வழங்கி னார்கள். தாராபுரம் புனித அலோசியஸ் மேல் நிலைப்பள்ளியில் அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.  தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட தாரா புரம் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 463 மாணவியர்களுக்கும், தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயி லும் 130 மாணவர்களுக்கும், என்.சி.பி  ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயி லும் 110 மாணவர்களுக்கும், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயி லும் 111 மாணவர்களுக்கும், சி.எஸ். ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 105 மாணவிகளுக்கும், அலங்கி யிம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயி லும் 72 மாணவ - மாணவியர்களுக்கும், தளவாய்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 52 மாணவ  மாணவி யர்களுக்கும், கோவிந்தாபுரம் எம்.என். சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்களுக்கும், குண்டடம் அரசு  மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 90  மாணவ மாணவியர்களுக்கும்,

குண்ட டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 54 மாணவ  மாணவியர்களுக் கும், வி.எம்.சி.டி.வி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 119 மாணவ மாணவி யர்களுக்கும், ஊதியூர் சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 77  மாணவ மாணவியர்களுக்கும், மூல னூர் ஊராட்சி ஒன்றியம், மூலனூர் அரசு  மேல்நிலைப்பள்ளியில் பயிலும்  117 மாணவ மாணவியர்களுக்கும், கன் னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவியர்களுக் கும், வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள் ளியல் பயிலும் 14 மாணவ  மாணவியர் களுக்கும், எலுகாம்வலசு அரசு மேல்நி லைப்பள்ளியில் பயிலும் 39 மாணவ மாணவியர்களுக்கும், கொளத்துப்பா ளையம் அரசு மேல்நிலைப்பள்ளிர் பயி லும் 68 மாணவ,மாணவியர்களுக்கும்,  மூலனூர் மாதிரிப்பள்ளியில் பயிலும் 74  மாணவ மாணவியர்களுக்கும், புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவ  மாணவியர்களுக் கும் விலையில்லா மிதி வண்டி வழங்கப் பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநக ராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் எம்.வாசுகி,  தாராபுரம் வருவாய் கோட்டாட்சி யர் குமரேசன், தாராபுரம் நகர்மன்றத்த லைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்குழுத்தலைவர் எஸ். வி.செந்தில்குமார், மாவட்ட கல்வி அலு வலர் தமிழ்ச்செல்வன் மற்றும் துறை  சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை

தருமபுரி, செப்.21-  டேராடூன் ராணுவ கல்லூரியில் 8 ஆம்  வகுப்பு மாணவர் சேர்க்கை தகுதி தேர்வுக்கு  வருகிற அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவ லக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  அதில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூ னில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ கல் லூரியில் 2023  ஆம் கல்வி ஆண்டில் 8 ஆம்  வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு தகுதி தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம்  தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண் ணப்பிக்க விரும்புகிறவர்கள் 11 வயதுக்கு குறையாமலும் 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 2.7.2010க்கு முன்போ 1.1.2012க்கு பின்னரோ பிறந்திருக்க கூடாது. இந்த தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படி வம், தகவல் கையேடு மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்கள் பெற பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600ம், எஸ்.சி.,  எஸ்.டி. பிரிவினர் சாதி சான்றிதழுடன் ரூ.555ம் கட்டணமாக செலுத்த வேண்டும். முழு முக வரி இந்த கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்ஐஎம்சி டேராடூன், டிராவி பிரான்ச், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேரா டூன், (பேங்க் கோடு 01576) உத்தரகாண்ட் என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து ராஷ்டி ரியா இந்தியன் மிலிட்டரி காலேஜ், கார்கி காண்ட், டேராடூன் உத்தரகாண்ட், 248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  அதனுடன் விண்ணப்பதாரரின் முழு முக வரி, பின்கோடு, செல்போன் எண் அல்லது தொலைபேசி எண் குறிப்பிடப்பட்ட கடி தத்தை அனுப்பி தேர்வுக்கான விண்ணப் பத்தை பெற்று கொள்ள வேண்டும். இந்த  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இரட்டை படிவங்களாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவ லர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணைய சாலை, பூங்கா நகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு வருகிற அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட் டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு கோவை, செப்.21- அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவ ருக்கு அறுவை சிகிச்சையின் போது மின்தடை ஏற்பட்ட நிலை யில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த ஊத்துப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஸ்வரன், வான்மதி  தம்பதியினர். விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணி யான தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு மருத்துவம னைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. உரிய  நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது. இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனும தித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து விளக்கம் கேட்க அன்னூர் அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் வேலாயுதத்தை போனில்  தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற  சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிவேக பயணம்:  யூடியூபர் மீது வழக்குப்பதிவு

கோவை, செப்.21- பாலக்காடு மெயின் சாலையில் அதிவேகமாக பயணித்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த செப்.14  ஆம் தேதியன்று டிடிஎப் வாசன் அவரது இருசக்கர வாக னத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், போத்தனூர் காவல் நிலைய எல் லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்.டி.எஸ்.பேக்கரி  அருகே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித  உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி  அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளி யிட்டுள்ளார். இதுசம்ந்தபமாக போத்தனூர் காவல் நிலை யத்தில் 279 ஐ.பி.சி, 184 எம்வி ஆர்டிக்கல் ஆகிய பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு, செப்.21- ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடு தல் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதை யொட்டி மதுரை, கரூர், பழனி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு செல் லும் பேருந்துகளை நிறுத் தும் வகையில் ஈரோடு  சோலாரில் புதிதாக தற்கா லிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற் கான பணிகளை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் கடந்த  சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இத னையடுத்து அப்பகுதியில் நிலத்தை சீரமைத்து தார்ச் சாலை அமைக்கும் பணி கள் தீவிரமாக நடந்து வரு கிறது.

 

 

;