districts

img

தென்னை நார் உற்பத்தி பாதிப்பு: தொழிலாளர்கள் வேலையிழப்பு

கோவை, ஜூலை 7- ஆனைமலை சுற்றுவட்டார பகுதி களில் மழைப்பொழிவால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர் கள் வேலையில்லாமல் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின் றன. இங்கிருந்து உற்பத்தி செய்யப் படும் தென்னை நார்கள் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே உலக பொருளாதார வீழ்ச்சி  காரணமாக இத்தொழில் பாதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு  பருவமழை துவங்கியுள்ளதால், தென்னை நார் தொழிற்சாலைகளில் நார் உலர்த் தும் பணி தடைபட்டு, தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், 400க்கும் மேற் பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. தென்னை நார் உற்பத்தி பாதிப்பால்,  தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்க னவே, விலைவாசி உயர்வு போன்ற சிர மங்களை சந்தித்து வரும் தொழிலாளர் கள், தற்போது வேலையிழப்பால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கட் டப்பணி ஆகியவை செய்து, ஒருநாள் பொழுதை கடக்கும் நிலை ஏற்பட்டுள் ளதாக இப்பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் வேதனையுடன் தெரிவித் துள்ளனர்.

;