districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை கொடிநிதி: அரசு நிர்ணயித்ததை விட146% அதிகமாக வசூல்

கோவை, டிச.8-  அரசு நிர்ணயம் செய்த தொகையை விட 146% அதிக மாக கொடிநாள் நிதி கோவை மாவட்டத்தில் வசூல் செய் யப்பட்டுள்ளதாக .மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரி வித்துள்ளார்.  முப்படை வீரர்களின் பணி மற்றும் தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி இந்திய அரசும், மாநில அரசுகளும் கொடிநாள் தினத்தை கடை பிடித்து வருகிறது. கொடி விற்பனை மூலம் திரட்டபடும் நிதி படை வீரர்களின் குடும்பத்தினருக்கும், உடல் உறுப்பு களை இழந்த படை வீரர்களின் நலனுக்காக பயன்படுத்த படுகிறது. சென்னையில் கொடிநிதி வழங்கிய தமிழக முதல்வர் அனைவரும் தங்களது பங்களிப்பை நல்க வேண் டும் என கேட்டு கொண்டார்.  இதன் ஒரு பகுதியாக, கொடிநாள் விற்பனையை கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி  வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் படைவீரர் கள் மற்றும் குடும்பத்தினருக்கு கல்வி, திருமண உதவி தொகை வழங்கபட்டது.  அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், ஒய்வு பெற்ற பின்னரும் பல்வேறு துறையில் படைவீரர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர் எனவும், இந்திய எல்லையில் இரவு, பகல் பாராமல் பணியில் ஈடு பட்டுள்ளவர்களை தினமும் கொண்டாடுவோம் என்றார்.  மேலும், கடந்த ஆண்டு அரசு 1.9 லட்சத்து 82,000   நிர்ண யம் செய்த நிலையில், 146% கூடுதலாக 1.59 லட்சத்து 87,500 ரூபாய் வசூல் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார்.. இதன் பின்னர் கடந்த ஆண்டு அதிக கொடி நாள் நிதி  வசூலித்த பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்  பாண்டியன் மற்றும் வாகன தணிக்கை ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.  இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்,லெப்டினல் கர்னல் சத்யபிரசாத், சாரதி, 110  பட்டாலியன் சுபேதார் மேஜர் முருகன் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு : மதுவிற்ற 3 பேர் கைது'

ஈரோடு, டிச.8- ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, போலீ சாருக்கு தகவல் வந்ததின் பேரில் , கருங்கல்பாளையம் போலீசார் அங்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டி ருந்த அதே பகுதியை சேர்ந்த கணேசன்(57) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர். சத்தி குள்ளன்கரடு காலனியில் மது விற்றதாக அதே  பகுதியை சேர்ந்த கருப்பசாமி(40) என்பவரையும், சித்தோடு மூலப்பாளையம் பால் சொசைட்டி பின்புறம் மது விற்றதாக எலவமலை சென்னநாயக்கனூரை சேர்ந்த தங்கராசு(30) உள்பட 2 பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து, 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் கோவையில் 11 பேர் தனிமைப்படுத்தல்

கோவை, டிச.8- ஒமிக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இந்தி யாவிலும் பரவியுள்ளது. கடந்த 10 நாளில் 23 பேர் ஒமிக் ரானால் பதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை  யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும்,  சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 13 நாடுகளிலிருந்து கோவை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது. அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுகின்றனர். பின்னர் 8 வது நாள் மீண்டும்  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து கோவை விமான நிலையம் வந்த 11 பயணிகளை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவர்களுக்கு ஆர்டிபிஆர் பரி சோதனை செய்தனர். இதில், யாருக்கும் கொரோனா பதிப்பு  இல்லை. இருப்பினும், அவர்கள் ஏழு நாட்களுக்கும் தனி மைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ தாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்தார்.
 

;