districts

img

கோவை தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி

கோவை, ஜூலை 4- கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந் தக்கல்லூரியினை சுற்றி பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் செவ்வாயன்று மாலை கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கட்டு மானப் பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடி யாக அருகில் இருந்தவர்கள் மீட்புப்பணி  மேற்கொண்டதுடன், தீயணைப்பு துறையின ருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இடிபாடு களில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் படு காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த இடி பாடுகளில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் பரி தாமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இடிபாடுகளில் இருந்து நான்கு தொழிலாளர் களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த தொழிலாளர் கள் கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் ஆகி யோர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பிபில்போயால் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரி யின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து நான்கு தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.