districts

கொரோனா காலத்தில் இருமடங்காக அதிகரித்த பிரசவங்கள் கோவை அரசு மருத்துவமனை சிறப்பாக கையாண்டு சாதனை

கோவை, டிச. 10 – கொரோனா பொது முடக்க காலத்தில் அதிகபட்ச பிரசவங்கள் நடைபெற்ற அரசு மருத்துவமனைக ளின் பட்டியலில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 3 ஆவது இடம் பிடித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்ப டுத்தப்பட்ட பொதுமுடக்க காலத்தில், தனியார் மருத்துவமனைகள் பிரசவ சிகிச்சைகள் மேற்கொள்ள மறுத்தன. இதன்காரணமாக பெரும்பாலான கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனை களை நோக்கிச் சென்றனர். இதனால் வழக்கத்தை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் இருமடங்கு அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்ப டுகிறது.  இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா பொது முடக்க காலத்தில் நடைபெற்ற பிரசவங்களின் எண் ணிக்கை அடிப்படையில் அதிகபட்ச பிரசவங்கள் நடைபெற்ற அரசு மருத் துவமனைகளின் பட்டியலில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மூன்றாவது இடத்தை பிடித் துள்ளது. முதல் இடத்தில் அரியலூர் அரசு மருத்துவமனையும், இரண் டாவது இடத்தில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யும் பெற்றுள்ளது. இதுகுறித்து, கோவை அரசு மருத் துவமனை முதல்வர் காளிதாஸ் கூறு கையில், மார்ச் முதல் அக்டோபர் வரையிலான 6 மாத காலத்திற்குள் மட்டும் 6 ஆயிரத்து 361 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் 930 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. மகப்பேறு சிகிச் சைக்கு முன் மற்றும் மகப்பேறு சிகிச் சைக்குப் பின் என 9 ஆயிரத்து 739 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது. இவர்களில் 119 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட் டவர்கள். மேலும், பல்வேறு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டும் உயர் சிகிச்சைக்காக இங்கு 3 ஆயிரத்து 388 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சிக்கலான மகப்பேறு சிகிச்சைகளும் இங்கு சிறப்பாக மேற் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித் தார்.

;