districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தங்க சுரங்க பகுதியில் சட்டவிரோதமாக நுழையும் அடையாளம் தெரியாத நபர்கள் 

உதகை, நவ.21- நீலகிரி தங்க சுரங்க பகுதியில் சட்டவிரோதமாக நுழை யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பந்தலூர், தேவாலா, நாடுகாணி ஆகிய பகுதிகளில் தங்க சுரங்க பாதை இயற்கை யாக அமைந்துள்ளது. இங்குள்ள ஏழு மலைகளில் தங்க சுரங்க பாதைகள் இருப்பதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உறுதி செய்து இங்கிருந்து பல டன் தங்கங்களை எடுத்து  வந்தனர். நாளடைவில் சுதந்திரத்திற்கு பின்னரும் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் தங்கம் குறைய துவங்கியதால், அந்த பகுதி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகின்றது‌. இந்நிலையில், அப்பகுதியில் அடையா ளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து சுரங்க பாதை களில் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.  மேலும், கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டு, தங்க சுரங்களில் வெடிக்கவிட்டு தங்கங்களை கடத்தி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்கா ணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகையில் கள்ளநோட்டு புழக்கம்

உதகை, நவ.21- உதகை அருகே கள்ளநோட்டு கொடுத்து மதுபானம் வாங்கிய நபர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உதகை  லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை யில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இதையடுத்து கடை நிர்வாகிகள் காவல் துறையினருக்கு  தகவல் தெரிவித்ததன் பேரில், ரோந்து பணியில் இருந்த காவல் துறையினர் டாஸ்மாக்  கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தை சோதனை செய்த தில், அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் பி1 காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், துணை ஆய்வாளர் ராஜாராம் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் கோவையை  சேர்ந்த தன்னாசி மகன் தீனதயாளன் (32)  என்பதும், அவரது நண்பரான பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவகுமார் மகன் கோபிநாத் (25), தலைகுந்தாவில் தனியார் தங்கும் விடுதி யில் தங்கி இருப்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், காந்தல் பகுதி யைச் சேர்ந்த அப்துல் ராசிக் மகன் அப்துல் ரகுமான்  (28) என்பவர் மேற்கண்ட நபர்கள் மூலம் கள்ளநோட்டு களை புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ரகுமான் வீட்டில் காவல் துறை யினர் சோதனை மேற்கொண்டதில், 500 ரூபாய் 46 கள்ள நோட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மூவரிடம் இருந்து மொத்தம்  ரூ.25 ஆயிரம் 500 கள்ளநோட்டுகள் பறி முதல் செய்யப்பட்டன. உதகையில் கள்ளநோட்டு  புழக்கம் உள்ளதால் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட் டுள்ளது.

வெள்ளலூர் குளத்தில் பட்டாம் பூச்சிகள் அதிகரிப்பு

கோவை, நவ.21-  கோவை வெள்ளலூர் குளத்தில் பட்டாம் பூச்சிகளின் வகைகளும், எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இயற்கை மற் றும் பட்டாம்பூச்சி அமைப்பு குழு சார்பில் பாவேந்தன் தலை மையில் இந்த ஆண்டுக்கான பட்டாம் பூச்சிகளை கணக் கெடுக்கும் பணி சனியன்று நடந்தது. 70 பட்டாம்பூச்சி வகை கள் கண்டறியப்பட்டுள்ளன. பட்டாம் பூச்சிகளுக்கான சிறந்த வாழ்விடமாக வெள்ளலூர் குளத்தின் உயிர்ச்சூழல் உள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள இயற்கை சூழல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சியால் உருவாக் கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனம், பட்டாம்பூச்சிகளுக் காக உருவாக்கப்பட்ட பூவனம் அதன் எண்ணிக்கை ஆச்சரி யமளிக்கும் வகையில் அதிகரிக்க உதவியுள்ளது. சில்வர் லைன், கிராண்டெமோன், டார்க் பால்ம்டாட், காமன் பேண்ட் பீகாக் உள்ளிட்ட பலவகை பட்டம்பூச்சிகள் பல வண்ணங்க ளில் இங்கு பறப்பதை காணமுடிகிறது.  தமிழகத்தில் இதுவரை 326 வகையான பட்டாம்பூச்சி கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 278 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் உயிர்சூழல், நீர்நிலைகளில் எண்ணிக்கை, இங்குள்ள சீதோஷ்ண நிலையே பட்டாம் பூச்சிகள் கோவை மண்ணை அதிக அளவில் சுற்றி பறக்க காரணங்களாகும் என கூறப்படுகிறது.

கூடலூர்: வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை

உதகை, நவ.21- நீலகிரி மாவட்டம், கூட லூரை அடுத்த ஓவேலி பேரூ ராட்சிக்குட்பட்ட நியூ ஹோப் தனியார் தோட்ட பகுதியைச்  சேர்ந்தவர் சிவகுமார். அரசு பேருந்து நடத்துனரான இவ ரது வீட்டை 5 காட்டு யானை கள் கொண்ட கூட்டம் சேதப் படுத்தியது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையி னருக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். இச்சம்ப வம் அப்பகுதி பொதுமக்களி டையே அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.


 

;