districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 16 ஆண்டு சிறை தண்டனை

அவிநாசி, டிச.23- அவிநாசி அருகே மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவிநாசி அருகே பெரியகானூரைச் சேர்ந்தவர் சந்தி ரன் (39). இவருக்கு மனைவி, 16 வயது மகள், 14 வயது  மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 நவ.24ம் தேதி  இரவு சந்திரன், தனது மகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர்  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு திருப்பூர் மகளிர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 16 ஆண்டு சிறைதண்டயும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி தீர்ப்பளித்தார்.

பிஏபி 4ம் மண்டல பாசனம் நிறைவு

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்

உடுமலை, டிச.23-  பிஏபி நான்காம் மண்டல பாசனம் நிறைவடைந்த தைத் தொடர்ந்து திருமூர்த்தி அணையிலிருந்து கால் வாய்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  பிஏபி பாசனத்திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதற்காக 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் 4ம் மண்டலத்தில் 94 ஆயி ரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 18ம் தேதியன்று 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர்  திறக்கப்பட்டது. இதன்மூலம் 5 சுற்றுகளாக 9,560 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழையும் கைகொடுத்ததால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.  இந்நிலையில் 4ம் மண்டல பாசனம் நிறைவு பெற் றதை அடுத்து தண்ணீ திறப்பு நிறுத்தப்பட்டது. திரு மூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் தற்போது 56.44 அடி நீர் இருப்பு உள்ளது. பாலாறு பகுதியில் வினா டிக்கு 128 கன அடியும், காண்டூர் கால்வாயில் 589 கன அடியும் நீர்வரத்து உள்ளது. அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக இருந்து வரும் நிலையில் வரும் 25ம் தேதி முதல் முதலாம் மண்டல பாசனத் துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பு செத்து மிதக்கும் மீன்கள்

கோவை, டிச.23-  கோவை வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பது அதிக ரிப்பதால், மீன்கள் செத்து மிதந்து வருகிறது. கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குள் உள்ள குளக் கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்படுவதோடு, படகு  குழாம், மிதவை சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், குளங்களில்  கழிவுநீர் கலப்பதை தடுக்க எவ்வித உரிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், குளங்களுக்கு மழை நீர் செல்லும் பாதைகளை அமைக்காமல் விடப்பட்டுள்ள தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் கோவை வாலாங்குளத்தில்  ஆங்காங்கே மீன்கள் செத்து மிதந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு  முன்பு வரை 2 மாதங்களாக பெய்த தொடர் மழை காரண மாக கோவையில் உள்ள 27 குளங்களும் முழுமையாக நிரம் பியது. இதனால் குளங்களுக்கு இடையே தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும், கழிவு நீரும், ரசாயன கழிவுகளும் அதிகமாக கலப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப் படுகிறது.  மேலும், தண்ணீரும் இயல்பான நிறத்தை விட, பழுப்பு  நிறத்திலும், சில இடங்களில் கருப்பு நிறத்திலும் காட்சி யளிக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளின்  இயற்கை சூழல் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத அள விற்கு குளத்து நீர் மோசமாக இருப்பதை வெளிப்படுத் தும் வகையில் மீன்கள்  செத்து மிதப்பது கோவை மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

பட்டா மாற்ற சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் இளம்பிள்ளை, டிச.23- சேலம் மாவட்டம், சங்க கிரி வட்டம் இடங்கண சாலை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பட்டா மாற் றம் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் டிச.24ம் தேதியன்று (வெள் ளியன்று) இளம்பிள்ளை  அருகே இடங்கணசாலை யில் உள்ள நகராட்சி திரு மண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், பட்டா தொடர் பான பெயர் திருத்தம், பரப்பு  திருத்தம், வாரிசு அடிப்படை யில் பட்டா மாற்றம் தொடர் பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப் பினை பயன்படுத்தி தங்க ளின் பட்டா மற்ற பிரச்னைக ளுக்கு உடனடி தீர்வு காணு மாறு கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.

;