districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை குற்றாலம் இன்று திறப்பு

கோவை, டிச.13- தொடர் மழையால் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், இன்று முதல் திறக்கப்படுவ தாக வனத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த  தென்மேற்கு பருவமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் கடந்த அக்.4 ஆம் தேதியன்று முதல் சுற்று லாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவி பகு திக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து, வடகிழக்கு பருவமழையும் தீவிர மடைந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையளவு குறைந்துள் ளதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து குறைந் துள்ளது. இதனால் இன்று (செவ்வாயன்று) முதல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித் துள்ளது. மேலும், அங்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் விற்பனை 4 பேர் கைது; 515 கிலோ பறிமுதல்

திருப்பூர், டிச.13- திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வட மாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 515 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் திருமுருகன் பூண்டியை அடுத்த  அம்மாபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகே  ஒருவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வ தாக திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் (பொ) பதுருன்னிசா பேகம் தலைமையிலான காவ லர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண் காணித்தனர். அப்போது அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.  இதையடுத்து அவரை மடக்கி பிடித்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பர் சிங் (38) என்ப தும், தற்போது அவினாசி பகுதியில் தங்கி இருப்ப தும் தெரியவந்தது. மேலும், இவரிடம் நடத்திய விசார ணையில் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என் பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி  வெளியில் விற்பனை செய்வதாக காவல்துறையினரி டம் தெரிவித்தார். இதையடுத்து அவரை அழைத்து கொண்டு மகேந்திரன் கடைக்கு சென்றனர். அங்கு சோதனை நடத்தியபோது மூடையில் ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தல்பர் சிங்,  மகேந்திரன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல் லைக்குட்பட்ட கோல்டன் நகர் பகுதியில் வீட்டில் புகை யிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய் ததாக சங்கர் கணேஷ் (37) என்பவரை காவல்துறையி னர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ  புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இரு  சம்பவங்களிலும் காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்

திருப்பூர், டிச.13-  திருப்பூரில் மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார். திருப்பூர் மின் பகிர்மான வட்டம் தாராபுரம் சாலையி லுள்ள பொல்லிகாளிபாளையம் அருகே அய்யம்பாளை யம் சிவசக்தி நகரில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கும்  பணியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி மருதாசலம் (39) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் அவரது வலது தோள்பட்டை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அம்பேத்கர் சிலை உடைப்பு: விசிக மறியல்

திருப்பூர், டிச.13- சேலம் மாவட்டம், ஓம லூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. காவல் துறையி னர் அவர்களை அப்புறப் படுத்தினர்.
 

;