districts

மக்களிடம் மனித உரிமை ஆர்வலர்கள் நேரில் விசாரணை

தருமபுரி, மே 14- ஒகேனக்கல் அருகே வனப் பகு தியில் உள்ள குடியிருப்புகளை அகற்றிய விவகாரத்தில், கிராம மக் களிடம் மனித உரிமை ஆர்வலர் கள் நேரில் சென்று விசாரணை நடத் தினர். தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல் அருகே பென்னாகரம் வனப்பகு திக்குட்பட்ட வேப்பமரத்து கொம்பு  கிராமத்தில் மூன்று தலைமுறைக ளாக 15க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். அண்மை யில் பென்னாகரம் வனத்துறையி னர், காவலர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடு கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி  அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக் குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலத்த காயம டைந்த 3 பேர் பென்னாகரம் அரசு  மாவட்ட தலைமை மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனா். இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியி னர், தன்னார்வ அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மனித உரிமைக்குழு நேரில் விசாரணை இந்நிலையில், திங்களன்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி சமூக செயல்பாட்டு இயக்க மாநில முதன் மைச் அமைப்பாளர் ரங்கநாதன் தலைமையில் மாநில மனித உரி மைகளுக்கான மக்கள் கூட்டமைப் பின் மாநிலத் தலைவர் தென்பாண் டியன், தமிழக ஆதிவாசி அமைப் புகளின் கூட்டமைப்பு பொதுச்செய லாளர் குணசேகரன், மனித உரிமை  ஆர்வலர் செந்தில் ராஜா, தலித் பெண்ணுரிமை கூட்டமைப்பு லட் சுமி, சமூக ஆர்வலர் கென்னடி ஆகி யோர் அடங்கிய மனித உரிமை ஆர் வலர்கள் நேரடியாக வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வனப்பகுதி மக்களிடம் வனத்துறையினரின் மேற்கொண்ட நடவடிக்கைகள், அணுகுமுறைகள், கிராமமக்க ளின் கோரிக்கைகள், தேவைப்ப டும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்த னர். குழந்தைகள் என பாராமல் வனத்துறை தாக்குதல் அதன்பிறகு செய்தியாளரிடம் அக்குழுவினர் கூறுகையில், வேப் பமரத்து கொம்பு கிராமத்தில் 15க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த  மூன்று தலைமுறைக்கும் மேலாக  வசித்து வருகின்றனர். வன பாது காப்பு சட்டத்தைப் பயன்படுத்தி பென்னாகரம் வனத்துறையினர் 40க்கும் மேற்பட்டோர் அத்துமீறி குடியிருப்புவாசிகளிடம் தகராறு  செய்துள்ளனர். கிருஷ்ணன் என்ப வரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெண் கள், குழந்தைகள் என பாராமல்  தாக்கியுள்ளனா். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது  முறையாக பதில் அளிக்கவில்லை. இதுவரையில் கிராமமக்கள் எவ் வித வனக்குற்றங்களிலும் ஈடுபட வில்லை. காவிரி கரையோரப் பகு தியில் ஏறத்தாழ பழங்குடியினர், பழங்குடியினர் அல்லாதோர் என  200க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். வன உரிமைச்சட்டத்தின் கீழ் மனு அளித்து வனப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் உரி மையை மீட்டெடுக்கவும், கிராம மக் களுக்கு ஊட்டமலை பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கவும் நட வடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

;