districts

img

தூய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி உரிய ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

ஈரோடு, செப். 17- கோபி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் தாமதமின்றி வழங்கக் கோரி சிஐடியு மனு கொடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நகராட்சியில் சுமார் 200  தூய்மை பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய் யப்படாமல் தினக்கூலி, ஒப்பந்த  தொழிலாளர்களாகவே வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி கூலி வழங்கப் படுவதில்லை. அதேசமயம் மாவட்ட  ஆட்சியரின் செயல்முறை ஆணைகள்  படியும் ஊதியம் வழங்கப்படுவ தில்லை. பிடித்தம் செய்யப்படும் வைப்புத் தொகையும் அந்த கணக்கில் செலுத்தப்படுவதில்லை. கொடுக்கப்படும் அத்தக்கூலியும் உரிய தேதியில் கொடுப்பதில்லை.  இந்நிலையில் சிஐடியு சார்பில் இத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நகர மன்றத்தில் மனு கொடுக் கப்பட்டது. மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன் தலைமையில் திரளான  தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர் களிடம் பேசிய சுப்ரமணியன் இத்தொழி லாளர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் தீர்க்கப்படாவிட்டால் வேலையை நிறுத்தி போராடுவோம் என்றார்.

;