districts

img

காலவாதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுக: சிஐடியு

நாமக்கல், மே 31- காலவாதியான சுங்கச்சா வடிகளை இழுத்து மூட வேண்டும் என சிஐடியு மோட்டார் இன்ஜி னியரிங் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்ட மோட்டார் மற்றும் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க 13 ஆவது மகாசபைக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் துவக்கி வைத்து பேசினார். சங்க மாவட் டச் செயலாளர் சு.சுரேஷ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஆட்டோ  சங்க மாவட்டத் தலைவர் பொன்னு சாமி வாழ்த்தி பேசினார். மாநில துணைத்தலைவர் பி.கனகராஜ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.  இதில், டெம்போ ஆட்டோ ஸ்டாண்ட்களில் ஓட்டுநர்களுக்கு பணிமனை இல்லாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அரசு சார்பில் ஓட்டுநர்களுக்கு பணி மனை அமைத்துத்தர வேண்டும். வெளி மாநிலங்கள் செல்லும் ஓட்டு நர்களுக்கு மூன்று ஷிப்ட் கணக்கில் எட்டு மணி நேர வேலையை உறு திப்படுத்தி ஓட்டுநர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர் நல வாரியத்தில் பணப் பயன்களை உயர்த்தி தரவேண்டும். காலாவ தியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மகாசபையில், மாவட்டத் தலை வராக எம்.ஆனந்தன், மாவட்டச் செயலாளராக சு.சுரேஷ், மாவட்டப் பொருளாளராக ஆர்.சக்திவேல், மாவட்டத் துணைத் தலைவர்கள் வீ.பழனிவேல், ஜே. ஆனந்தராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் எம்.முனியப்பன், கே.மாதேஸ்வரன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், கே.மாதேஸ்வரன் நன்றி கூறி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி நிறைவுரையாற்றினார்.

;