சேலம், செப்.24- சிஐடியு சேலம் மாவட்ட மாநாடு சனியன்று துவங்கி யது. இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சேலம் மாவட்ட 13 ஆவது மாநாடு தோழர்.கே.வைத்தியநாதன் நினை வரங்கில் சனியன்று துவங்கியது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற மாநாட் டில், செங்கொடியை மேக்னசைட் தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர். கே.பழனிசாமி ஏற்றி வைத்தார். மாநாட்டை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் துவக்கி வைத்து பேசினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலா ளர் டி.உதயகுமார் வேலை அறிக்கையையும், மாவட்ட பொரு ளாளர் வி.இளங்கோ வரவு - செலவு அறிக்கை சமர்ப் பித்தனர். தொடர்ந்து ஞாயிறன்று நடைபெறும் இரண்டா வது நாள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள், நிர்வாகி கள் தேர்வு நடைபெற உள்ளது.