நாமக்கல், செப்.12- தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு ஞாயிறன்று மாவட்ட தலைவர் வீ.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, பொருளா ளர் கு.சிவராஜ் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் சு.சுரேஷ் வாழ்த்து ரையாற்றினார். இதில், தொகுப்பூதியத்தில் பணிபுரி யும் தூய்மை பணியாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஊதியக்குழு பரிந்துரை யின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த வர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதி யம் நிர்ணயம் செய்து, ஊதியம் மற்றும் அரியஸ் உடனடியாக வழங்க வேண் டும். தூய்மை பணியாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உயர்த்தப்பட்ட ஊதியம் மற்றும் அரியர்ஸ் தொகையை உடனடியாக ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத் தரவிட வேண்டும். கடந்த அதிமுக ஆட் சிக்காலத்தில் அறிவித்த 1400 ரூபாயை உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய மாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவாக சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவராக வீ.கண் ணன், மாவட்ட செயலாளராக ந.வேலு சாமி, மாவட்ட பொருளாளராக கு.சிவ ராஜ் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி. முருகேசன் நிறைவுறையாற்றினார்.