districts

img

ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்களை இயக்க அனுமதித்திடுக

சேலம், டிச.3- ஏற்காடு மலைப் பாதையில் கனரக வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.  ஏற்காட்டில் பல ஆயிரக்கணக் கான மக்கள் வாழ்ந்து வருகின்ற னர் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறிகள், மளிகை பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத் தும் சேலம் அடிவாரம் பகுதியி லிருந்து ஏற்காட்டிற்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வரு கின்றனர். இந்நிலையில் தற்போது மலைப்பாதையில் மண்ணரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்த தால் கனரக வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் அனு மதி மறுத்துள்ளது.

மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களை கடந்தும் சாலை பராமரிப்பு பணி களை மாவட்ட நிர்வாகம் சரிவர  செய்யாததால் ஏற்காடு பகுதியில் கனரக வாகன தொழிலை நம்பி யுள்ள 300க்கும் மேற்பட்ட ஓட்டு நர்களும், அந்தத் தொழிலை சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்களும் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதேபோல், ஏற்காடு மலை யில் லாப்பிங் மரங்களை வெட் டும் தொழில் நடைபெறுவது வழக் கம், இந்த மரங்கள் கனரக வாக னங்கள் மூலம் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டு மர மில்களில் கொடுத்து தங்களது வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வந் தனர். தற்போது கடந்த நான்கு மாதங்களாக லாபிங் மரம் வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளதால் அத்தொழிலை நம்பியுள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  

எனவே, பழுதடைந்த சாலையை உடனடியாக சரி செய்து ஏற்காடு மலைப்பாதை யில் கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.குறிப் பாக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்களின் வாழ்வாதார தேவை களை பூர்த்தி செய்ய மிக முக் கிய வழிப்பாதையாக உள்ள ஏற்காடு அடிவாரம் மலைப்பாதை யில் கனரக வாகனத்தை இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய தலை யீடு செய்து சாலையை சரி செய்ய  வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு சேலம் மாவட்ட சாலை போக் குவரத்து மற்றும் மோட்டார் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் ஒண்டிக் கட்டை ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  இச்சங்கத்தின் ஏற்காடு கிளை தலைவர் எ.அருணாச்சலம் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.கோவிந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் முரு கேசன், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், சாலை போக்குவரத்து சங்க ஏற் காடு செயலாளர் பாலமுருகன், பொருளாளர் லோகநாதன், ராமர், ரஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு 200க்கும் மேற்பட்ட கன ரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

;