districts

img

டாஸ்மாக் சுமைப்பணி வேலைக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க சிஐடியு கோரிக்கை

கோவை, செப். 12 -  டாஸ்மாக் குடோன்களில் சுமைப் பணி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில், தமிழர்களுக்கே முன் னுரிமை அளிக்க வேண்டும் என சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாநாடு வலியு றுத்தியுள்ளது.  கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு)  17 ஆவது மகாசபை காந்திபுரம் மலை யாளி சமாஜத்தில் எம்.ஏ.பாபு தலை மையில் நடைபெற்றது. எம்.ராதா கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மகாசபையை துவக்கி வைத்து சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் சம்மே ளன பொதுச்செயலாளர் ஆர்.வெங்கட பதி உரையாற்றினார். கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.ராஜன் வேலைய றிக்கை முன்வைத்தார். இதில், சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண் டும். டாஸ்மாக் குடோன்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்க வேண்டும். தமிழக டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தமிழர்க ளுக்கே முன்னுரிமை அளிக்க வேண் டும். தமிழக அரசு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங் கத்தின் கௌரவ தலைவைராக எம்.ஏ. பாபு, தலைவராக எம்.ராதாகிருஷ் ணன், பொதுச்செயலாளராக ஆர்.ராஜன், பொருளாளராக எம்.எஸ்.பீர் முஹம்மது உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. மகாசபையை நிறைவு செய்து சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி உரையாற்றினார். இதில், பெருந் திரளான சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

;