districts

பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கியில் செலுத்தக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.6- தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய் யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு குறிப்பாக, தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி கருவிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண் டும். தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித் தம் செய்யப்பட்ட கடன் தொகை சுமார் ரூ.60 லட்சத்தை தொழி லாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தொழிலாளர் களது சேம நல நிதிக்கு முழுமையான கணக்கு சீட்டு வழங்க வேண்டும். ஒப்பந்த பிரிவு தூய்மை பணியாளர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தி னர் மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வீ. இளங்கோ தலைமை வகித்தார். இதில், செயலாளர்  செ.கருப் பண்ணன் உட்பட திரளான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவினை சங்கத்தின் தலைவர்கள் அளித்தனர்.

;