தருமபுரி, செப்.13- மின்துறையை பொதுத்துறை யாகவே பாதுகாக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் தீர்க்கப் படாத கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மின்துறையை பொதுத்துறை யாகவே பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடி பெற்ற சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணைய எண்:2யை ரத்து செய்ய வேண்டும். 2022 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படியை வழங்க வேண் டும். 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக் கப்பட்ட சரண்டர் விடுப்பு வழங்க வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். 2019 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலு வைத்தொகையுடன் வழங்க வேண் டும். தரமான தளவாட சாமான் களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி நேர தூய்மை பணி யாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை மின் நிலையங்களை அவுட்சோர் சிங்க்கு விடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வி.வெண்ணிலா தலைமை வகித்தார். சிஐடியு மாநி லச் செயலாளர் சி.நாகராசன், தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத்தலைவர் பி. ஜீவா, மாவட்ட செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் எம். ஜெயக்குமார், ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஈரோடு இதே கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மின்பகிர்மான வட்டக் கிளை தலைவர் எம்.ஆர்.பெரிய சாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சி.ஜோதிமணி சிறப்பு ரையாற்றினார். கிளை செயலா ளர் பி.ஸ்ரீதேவி உள்ளிட்ட திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.