districts

img

காய்கறி மூடையை 50 கிலோவாக குறைத்திடுக சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்

உதகை, செப்.26-  மலை காய்கறி மூடை 100 கிலோ என்பதை குறைத்து 50 கிலோ மூட்டை யாக சுமையை குறைக்க வேண்டும்  என சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள் ளது. சிஐடியு சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் 8 ஆவது மாவட்ட பேரவை  கூட்டம் உதகை சிஐடியு அலுவலகத் தில் நடைபெற்றது. சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் 8 ஆவது மாவட்ட பேரவை உதகை சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. சிஐடியு டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகி  ஆர். ரமேஷ் தலைமை தாங்கி னார். ம.சிவகுமார் சங்க கொடியை ஏற்றி னார். அசைன் வரவேற்புரை ஆற்றி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். ரமேஷ் துவக்க உரையாற்றினார். சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ராஜன் வேலை அறிக்கை முன்வைத்தார். உதகை டாஸ்மாக் குடோனில் தேவை யான அடிப்படை வசதிகள் உருவாக்க  வேண்டும். உதகை மலை காய்கறிக ளின் எடையை 100 கிலோவில் இருந்து 50 கிலோவாக குறைக்க வேண்டும். நலவாரிய சலுகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நலவாரிய அலுவ லகங்களை தாலுகா மையங்களில் உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராக ரங்கசாமி, செயலாளராக கே.ராஜன், பொருளாளராக டி.பி அரவிந்தாக்சன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ. நவீன் சந்தி ரன் நிறைவுரையாற்றினார். முடிவில், லட்சுமணன் நன்றி கூறினார்.

;