கோவை, செப்.29- அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை உள்ளிட்ட பண பலன்களை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். தேவைக்கேற்ற ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி அமர்த்தும் திட்டம் மற்றும் தனியார் மய முயற்சியைக் கைவிட வேண்டும். 2020 மே மாதம் முதல் ஓய்வுபெற்ற பணியின் போது இறந்த மற்றும் விஆர்எஸ் பெற்ற தொழிலா ளிக்கு பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுபாளையம் சாலை அரசு போக்குவரத்து தலைமை பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிசி கிளை செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில், அரசு போக் குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கனகராஜ், கோவை மாவட்ட தலைவர் வேளாங்கண்ணிராஜ், செந்தில், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி சுரேந்திரன் ஆகியோர் உரையாற்றி னர்.
ஈரோடு
சத்தியமங்கலம் கிளை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க சிஐடியு கிளை தலை வர் என்.தேவராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு மண்டல தலைவர் கே.மாரப்பன் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் ஏ.பி.ராஜு, ஆர்.செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோபியில் கிளை தலைவர் கருப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை பொது செயலாளர் டி.எஸ்.பாலகிருஷ்ணன், தேவ ராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் எம்.கே.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பவானி பனிமனை முன்பு கிளை தலைவர் ஏகாம்பரம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்
நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி சேலம் போக்கு வரத்து தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்ட தலைவர் கே. செம்பன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் சேலம் கோட்ட செயலாளர் அன்பழ கன், கோட்ட பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சேகர், துணை பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் கண்டன உரை யாற்றினர். இதில் சம்மேளன குழு உறுப்பி னர் இளவழகன் உள்ளிட்ட திரளான போக்கு வரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற் றோர் நல அமைப்பினர் பங்கேற்றனர்.