districts

தொழிலாளர் துறை அலுவலகத்தை விரைந்து திறந்திடு! ஜூலை 16 இல் திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 19 -  திருப்பூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட் டுள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து திறந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அரசு நிர்வாகத்திற்கு சிஐ டியு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக திருப்பூரில் ஜூலை 16இல் சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில  துணைத் தலைவர் கே.சி.கோபி குமார், மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டுமான சம் மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார்,  துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:  திருப்பூர் மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட தொழிலாளர் துறை அலுவ லகத்தை காலதாமதம் செய்யாமல் உடனடி யாகத் திறக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூர்  மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகம்  குமார்நகர் பிஷப் ஸ்கூல் எதிரில் புதிதாக கட்டி  முடிக்கப்பட்டு பல நாட்களாக திறக்கப்படா மல் உள்ளது. தொழிலாளர் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் அலுவலகம் என்பதாலும், அனைத்து தொழிலாளர்கள் துறை அலுவல கம் ஒரே இடத்தில் செயல்பட இருப்பதால் தொழிலாளர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். தொழிலாளர் பல்வேறு இடங்களுக்கு சென்று அலைக்கழிய வேண்டியதில்லை. தற் பொழுதுகூட நலவாரியம் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. சொந்த கட்டிடம் ஏற்படுத்தியும், வாடகை கட் டிடத்தில் செயல்படுவது அரசுக்கு நிதி விர யத்தை ஏற்படுத்தும் என்பதை கணக்கில் கொண்டு உடனடியாக புதியதாக கட்டப்பட் டுள்ள அலுவலகத்தை திறந்து செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். நலவாரிய  அதிகாரியின் தன்னிச்சை செயல்பாடு மேலும் திருப்பூர் மாவட்ட நலவாரிய உதவி ஆணையர், தொழிலாளர்களை அலைக்கழிக்கும் பணியைச் செய்து வருகி றார்- வாரிய கூட்ட முடிவுக்கும், அரசின்  சட்ட திட்டத்திற்கும் உட்படாமல் தான் விரும் பிய அளவில் நலவாரிய பணிகளுக்கு தொழி லாளர்களின்  தேவையற்ற ஆவணங்களை கேட்டு, தேவையற்ற காரணங்களை சொல்லி  விண்ணப்பங்களை நிராகரிக்கிறார். குறிப் பாக பென்சன் உதவி கேட்டு விண்ணப்பித் துள்ள வயது முதிர்ந்த தொழிலாளர்களிடம் வாரியத்தால் சொல்லப்படாத பிறப்பு சான்று.  பள்ளி சான்று கேட்டு விண்ணப்பங்களை நிரா கரிக்கிறார். இந்த செயல் தொழிலாளர் களை அலைக்கழிப்பதாக உள்ளது. மேலும்  விதவை ஓய்வூதியம் மற்றும் தமிழக அரசு  பெண்கள் உரிமை தொகை பெறக்கூடிய பெண் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி  உட்பட எந்த உதவியும் தர மாட்டேன் என  மறுத்து செயல்படுகிறார். நலவாரிய கமிட்டி யும், அரசும் எந்த இடத்திலும் பணப்பயன்கள் கிடைக்காது என அறிவிக்கவில்லை. ஆனால் இந்த திட்டத்திற்கு மாறாக அவர் செயல்படுவது அரசின் திட்டங்களை மறுக் கும் செயல்பாடாகும். எனவே தொழிலாளர்க ளின் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண வேண் டும். உடனடியாக உதவிகள் வழங்க வேண் டும் என சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு நலவாரி யத்தை முறையாக செயல்படுத்துவதற்கு, நலவாரியத்தில் அழிந்து போன ஆவணங் களுக்கு அரசே பொறுப்பேற்று விசாரனை  நடத்த வேண்டும், அனைத்து ஆவணங்களை யும் அழிந்ததை சரிப்படுத்தி சர்வரில் தரவு கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்,  மாவட்ட அலுவலகங்களில் தொழிலாளர்கள் நேரிடையாக பதிவு (ஆப்லைன்) செய்யும் முறையை உருவாக்க வேண்டும். தேங்கி யுள்ள அனைத்து பணப்பயன் விண்ணப்பங் களுக்கும் கால தாமதம் இல்லாமல் உதவி  வழங்க வேண்டும். தேவையற்ற, ஆவணங் களை கேட்டு தொழிலாளர்களை அலைக்க ழிக்கக் கூடாது. பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிய கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமலாக்க, மாவட்ட கண்காணிப்புகுழு கூட்டத்தை முறையாக மாதந்தோறும் கூட்ட வேண்டும்.  அனைத்து வாரியங்களின் கமிட்டி கூட்டங் களை கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்கு வதை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாரி யங்களிலும் ஒரே மாதிரியான பணப்பயன் கள் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி ஜூலை 16ல் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம்  நடத்துவது என  சிஐடியு மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. உடுமலை பணிமனை மூடல் உடுமலையில் அரசுப் பேருந்து கூடு கட் டும் பணிமனையாக செயல்பட்டு, தரச்சான் றுக்கு புதுப்பிக்கும் பேருந்துகளை சீர மைக்கும் பணிமனையாக செயல்பட்டு வந்த  அரசுப் போக்குவரத்துப் பணிமனையை அதி காரிகள் தன்னிச்சையாக மூடியதையும், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை வேறு  இடத்திற்கு மாறுதல் செய்ததையும் கைவிட  வேண்டும் என்று சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கேட்டுக் கொண்டார்.