districts

img

பாலர்கள் சங்கமம்: காந்தி முகமூடியுடன் குழந்தைகள் பேரணி

திருப்பூர், அக்.2- மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு திங்களன்று 400க்கும் மேற் பட்ட குழந்தைகள் காந்தியின் முகமூடி அணிந்து கையில் தேசிய கொடியேந்தி பேர ணியாகச் சென்றனர். திருப்பூர் மாவட்ட பாலர் பூங்கா சார்பில் பாலர்களின் சங்கமம் திருப்பூர் காலேஜ் ரோடு சமுத்திரா கிராண்ட் மஹாலில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு நகர பொறுப்பாளர் துரை.சம்பத்  தலைமை வகித்தார். குழந்தைகள் காந்திய டிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ் சலி செலுத்தினர். இதையடுத்து, வரவேற்புக் குழுத்தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மதச் சார்பற்ற இந்தியாவைப் பேணி காப்போம் என்று குழந்தைகள் உறுதிமொழி எடுத்துக்  கொண்டனர். இதைத்தொ டர்ந்து, ஜிகினா சிலம்பக் குழு வினரின் சிலம்பாட்டம், ரங்க நாதன் கராத்தே குழுவின் கராத்தே தொகுப்பு ஆகி யவை நடைபெற்றன. இதையடுத்து, ஆசிரியர் வீரையாவின் மேஜிக் ஷோ  நடைபெற்றது. ஹரிஹரன் எளிய அறிவியல் பரிசோத னைகளை குழந்தைகளுக்கு செய்து காட்டினார். வானவி யல் துறை சார்ந்து அறிவியலாளர் ஜெயமு ருகன் கருத்துரையாற்றினார். பாலர் பூங்கா மாநில பொறுப்பாளர் வனஜா நிறைவு செய்து  வைத்துப் பேசினார். இதில், ஒருங்கிணைப் பாளர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட குழந் தைகள், பெற்றோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாலர் பூங்கா நிர்வா கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாவட்ட செயலாக்க குழு உறுப்பினர் சந்துரு  நன்றி கூறினார்.