districts

img

அங்கீகார தேர்தல்: பிஎஸ்என்எல்இயூ மாபெரும் வெற்றி

கோவை, அக்.14- பிஎஸ்என்எல் சங்க அங்கீகாரத் தேர்தலில் பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் தொடர்ந்து கோவையில்  9  ஆவது முறையாகவும், அகில இந் திய அளவில் தொடர்ந்து 8 ஆவது முறையாக வெற்றியை தக்கவைத் துள்ளது. இதனையடுத்து பிஎஸ் என்எல் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி யும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் கடந்த 12 ஆம்  தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று நடை பெற்றது. மாலை முடிவுகள் வெளி யாகின. இதில், அகில இந்திய அள வில் பிஎஸ்என்எல் எம்ளாயிஸ் யூனி யன் தொடர்ந்து 8 ஆவது முறையாக மாபெரும் வெற்றியை பெற்றது.  கோவையில் 48 சதவிகிதம் வாக்கு களை பெற்றும் தொடர்ந்து 9 ஆவது முறையாக பிஎஸ்என்எல்யூ வெற் றியை தக்கவைத்து தனதாக்கிக் கொண்டது. இதில், மொத்த வாக்கு களில் என்எப்டி 52 வாக்குகளும், பிஎஸ்என்எல்இயூ 140 வாக்கு களும் பெற்று வெற்றி பெற்றனர்.  

இதனையடுத்து மாவட்ட ஆட் சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பட்டாசு கள் வெடித்தும், இனிப்புகள் வழங் கியும் வெற்றியை கொண்டாடினர். இதில், பிஎஸ்என்எல்யு மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், தலை வர் கல்யாணக்குமார், பொருளா ளர் சரவணக்குமார், உதவி செயலா ளர் சாகீர் அகமது உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  சேலம் இதேபோன்று சேலம், நாமக் கல் மாவட்டங்களில் உள்ளடக்கிய சேலம் தொலைத்தொடர்பு மாவட் டத்தில் மொத்தம் 247 பேர் அங்கீ கார தேர்தலில் வாக்களிக்க தகுதி யுடையவர்களாக இருந்தனர். இதில் பிஎஸ்என்எல் எம்பிளாயிஸ்  யூனியன் 134 வாக்குகளையும், என்எப்டிஇ தொழிற்சங்கம் 106  வாக்குகளையும் மற்ற தொழிற்சங் கங்கள் ஆறு வாக்குகளையும் பெற்றது. 134 வாக்குகளைப் பெற்று பிஎஸ் என்எல் எம்பிளாய் யூனியன் சங்கத் தின் அங்கீகாரத்தை தொடர்ந்து 8  ஆவது முறையாக கைப்பற்றியுள் ளது. இதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் பிஎஸ் என்எல் எம்பிளாய்ஸ் யூனியன் மாவட்ட தலைவர் ஹரிஹரன், மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட பொருளாளர்  சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;