திருப்பூர், ஜூலை 11 – மணிப்பூர் மக்களைப் பிளவுபடுத்திய ஒன்றிய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.மோகன் தலைமை ஏற்றார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்சி., புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.இசாக், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செய லாளர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.