districts

img

கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி சோதனை

தருமபுரி, செப்.14- தருமபுரியில் கனிம வளத்துறை  இணை இயக்குனராக பணியாற்றி  வந்த சுரேஷ்குமார் என்பவரது வீட் டில் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படு கிறது. சென்னையில் கனிமவளத் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் என் கிற சுரேஷ்குமார். இவர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனிம வளத்துறையில் பணியாற்றி உள் ளார். ஏற்கனவே இவர் மீது ஒப் பந்த முறைகேடு தொடர்பாக சிபி சிஐடியில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில். சேலம் மாவட்ட சிபிசிஐடி பிரிவினர் புதனன்று காலையில் தருமபுரி சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ்குமாரின் இல்லத்தில் சோதனை நடத்தினர்.  இச்சோதனையில் பத்துக்கு மேற் பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.  மேலும் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் தற் காலிகமாக காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து புதனன்று காலை முதல் நடைபெற்ற இந்த சோதனை சுமார் 6  மணி நேரத்துக்கு பிறகு நிறைவு  பெற்றது. இதில் சில முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  கனிமவளத் துறையின் இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் இல்லத்தில், சிபிசிஐடி பிரி வினர் சோதனை நடத்தியதில், தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;