districts

img

சாதிய மோதல்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்யாது

ஈரோடு, மே 29- சாதிய மோதல்கள் நடப்பதும்,  கலவரங்கள் உருவாக்கப்படுவ தும் எந்த வகையிலும் சமூக வளர்ச் சிக்கு, மாநில முன்னேற்றத்திற்கு உதவி செய்யாதென சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம்  தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு முன் னாள் உறுப்பினர் தோழர் எம்.நாச்சி முத்து படத்திறப்பு விழா நசியனூ ரில் நடைபெற்றது. கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் பி.சண்முகம் புகழஞ்சலி செலுத்தி பேசுகையில், இறப்பு என்பது தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவரைக் காப் பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம். அதையும் மீறி  இறப்பு நிகழ்ந்துள்ளது. அதேநே ரத்தில், “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்” என்னும் திருக்குறளுக்கு ஏற்ப அவர் எப்படி வாழ்ந்தார்; என்ன மாதிரியான செயல்களை செய்தார் என்பதைப் பொறுத்தது தான் மதிப்பிட வேண்டும். அப்படிப் பார்த்தால் நாச்சிமுத்து நிறைவான  வாழ்க்கையை வாழ்ந்து சென்றி ருக்கிறார். சாதியின் பெயரால் ஏராளமான  கொடுமைகள் தமிழகத்தில், இந்தி யாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சாதிய ஆணவகொ லைகள் நடக்கக்கூடிய மாநிலங்க ளில் ஒன்றாக தமிழகமும் இருக்கி றது. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில், தந்தை பெரியார் துவங்கி கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரா ளமான தலைவர்கள் பலரும் போரா டினர்; போராடி வருகின்றனர். ஆனாலும், அது மேலும் மேலும் வேரோடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சாதிய பிடிமானம் இளைய சமுதாயத்திடம் அதிகரித் துக் கொண்டிருக்கும், காலகட்டத் தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். அதை கெட்டிப்படுத்தக்கூ டிய வகையில் சில தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது, எந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உதவி செய்யாது.  சாதிய மோதல்கள் நடப்பதும், கலவரங்கள் உருவாக்கப்படுவ தும் எந்த வகையிலும் சமூக வளர்ச் சிக்கு, மாநில முன்னேற்றத்திற்கு உதவி செய்யாது. ஆனாலும், அத்த கைய வேதனைப்படத்தக்க சம்ப வங்கள் நடைபெறுகிறது. அத்த கைய சம்பவங்கள் நடைபெறுகிற  போது கட்சி வித்தியாசமின்றி அனைவரும் கண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பல நேரங்களில் பல  கட்சிகள் மவுனமாக இருப்பது எந்த விதத்திலும் தமிழகத்திற்கு நல்ல தல்ல. ஆகவே. சாதிய பாரபட்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அரசியல் சாசனம் என்ன சொன் னாலும் நாங்கள் நினைக்கிறபடி தான் நடந்து கொள்வோம் என்பது  முழுக்க சட்டத்திற்கு விரோதமா னது. ஆகவே, சாதிய பாரபட் சத்தை, கொடுமைகளை ஒழிப்பதற் கும், நாட்டில் சமத்துவ சமுதா யத்தை உருவாக்கவும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவிலும், தமிழகத்திலும் நடத் திக் கொண்டிருக்கிறோம். இடை யில் தேர்தல்கள் வரும் போகும். ஆக ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம், அனைவருக்கும் சம மான வாய்ப்பு, சமத்துவமான  வாழ்க்கை என்பதற்கான கோட் பாட்டை நடைமுறைப்படுத்துவ தற்கு, அத்தகைய ஒரு சூழலை உரு வாக்குவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அத்தகைய போராட்டத்தில் தன்னை முழுமை யாக அர்ப்பணித்துக் கொண்டவர் அருமை தோழர் நாச்சிமுத்து என்று  குறிப்பிட்டார்.

;