districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

நாமக்கல், செப்.6- வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறு வதற்கு விண்ணப்பிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்டத்தில், படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் எவ்வித  வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக  காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெறாதவர்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப்  பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும்  பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை  மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  தேர்ச்சி பெறாதவாகளுக்கு ரூ.600,மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000  வீதம் பத்தாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப் படுகிறது.  தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல்  சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் www.tnvelaivaaippu.gov.in. என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள் ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித் துள்ளார்.

பள்ளியில் இருந்த நாட்களே சிறந்த தருணமாகும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

உதகை, செப்.6- பள்ளியில் இருந்த நாட்களே சிறந்த தருணமாகும் என உதகை  லாரன்ஸ் பள்ளி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள்  தலைவர் கே.ராதாகிருஷ்ணன்  உரையாற்றினார். நீலகிரி மாவட்டம், உதகை லவ் டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளி ஒன்றிய மனிதவள  மேம்பாட்டு அமைச்சகத்தின்  கட்டுப்பாட்டில் இயங்கி வரு கிறது. இந்த பள்ளியின் 164 ஆவது நிறுவன தின விழா கடந்த 2 நாட் களாக நடைபெற்றது. பள்ளியின் மாணவ தலைவரான சிவக்குமரன் கட்டளையின் கீழ், பாரம்பரிய சீருடையில் ஒரு வலுவான ராணுவ மரபு கொண்ட  அணிவகுப்பு செவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவரும்,  தற்போதைய இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆளுநர் குழுவின் தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களும், விருதுகளும், பரிசுக்கோப்பைகளும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், உலக அரங்கில் இந்தியா தற்போது சிறந்த இடத்தை பிடித்ததற்கு சிறந்த அரசியல் தலைவர்களும், அரசியல் நிலை தன்மையும் காரணமாகும். நாம் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு, அதை செய்வதைவிட அந்த விஷயமாகவே மாறி விடுவதுதான் சிறந்த அறிவாகும். எனது கடந்த ஆண்டு கால பணியின் மூலம் வெற்றியை விட தோல்வியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

அதே சமயத்தில் தோல்வியின்போது வரும் விமர்சனங்களை சரியாக உற்று நோக்கினால் அதிலிருந்து வெற்றிக்கான சூட்சமங்களை கண்டறியலாம். அதேபோல்  குழுவாக இணைந்து செயல்படுதல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய பண்புகள் மிகவும் முக்கியமாகும். பள்ளிகளில் இருந்த நாட்களே வாழ்க்கையின் சிறந்த தருணமாகும். நாம் எந்தத்துறையில் பணியாற்றினாலும் நாட்டுக்கும், மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். அதேபோல் செயற்கைக்கோள்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகள் மனித உயிர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதே முக்கியம், என்றார். முன்னதாக, இசைக்குழு மாணவர்கள் ஒன்றிணைந்து செய்த இசை வித்தையானது காண்போரையும், கேட்போரையும் வியக்க வைத்தது.  இதேபோல் பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகளும், கலையரங்கில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், கைவினைக்கலைகள் உள்பட பல துறை சார்ந்த கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன், உலகின் பல நாடுகளில் இருந்தும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயி உண்ணாவிரதம்

திருப்பூர், செப்.6- பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிரா மத்தில் தனியார் கல்குவாரி  முறைகேட்டைக் கண்டித் தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயி விஜயகுமார் காலவரையற்ற உண்ணா விரத்தை கடந்த எட்டு  நாட்களாக அவர் போராட் டத்தைத் தொடர்ந்து வருகிறார்.  இந்நிலையில், எஸ்.ஜி.ப்ளூ மெட்டல்ஸ் என்ற  தனியார் கல் குவாரியால்  பாதிக்கப்பட்ட விவசாயி செந்தில்குமார் என்பவர்  செவ்வாய்க்கிழமை முதல்  காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

10 பவுன் தங்கநகைகள் கொள்ளை

தாராபுரம், செப்.6-  தாராபுரம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை  செய்யும் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்   வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளை அடையாளம்  தெரியாத நபர்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியை  சேர்ந்தவர் ரபிதீன் (45). பெங்களூரில் வீட்டு உபயோக பொருட் களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த சில  தினங்களுக்கு முன்பு  உறவினர்களை பார்ப்பதற்காக ரபிதீன்  குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டார். இந்நிலையில் சனியன்று ரபிதீன் சகோதரர் பரூக், அண்ணன் வீட்டை பார்த் துள்ளார். அப்போது முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்ததை ரபிதீனுக்கு போன் மூலம் தகவல் கொடுத் தார். அதற்கு அண்ணன் ரபிதீன் குடும்பத்துடன் புறப்பட்டு வருவதாகவும் அதுவரை யாரும் வீட்டினுள் செல்ல வேண் டாம் என கூறினார். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த ரபி தீன், பீரோவில்  வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளை  அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தக வலறிந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனதாசு தலைமையில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற் றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து  இதுகுறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு, தனிப்படை  அமைத்து  அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை  ஆய்வு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற அடை யாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

60 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு

அவிநாசி, செ.5- திருப்பூர் மாவட்டம், அவி நாசி ராஜாஜி வீதியைச்  சேர்ந்தவர் வஹாப்(52). திருப்பூரில் (டூட்டிபெய்டு ஷாப்)விற்பனையகம் வைத்து நடத்திவருகிறார்.  மனைவி பைரோஜா பேகம் (43).மகன்கள்  இப்ராஹிம் (23), இர்பான்(20). இவர்கள்  மைசூரில் உள்ள உறவினர் இறப்பு வீட்டுக்கு சனிக் கிழமை சென்றுள்ளனர். திங் கள்கிழமை மாலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்தி ருந்த 60 பவுன் நகைகள், ரூ.6  லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. தகவலறிந்து சம் பவ இடத்துக்கு வந்த காவல் துரையினர், வழக்குப் பதிவு  செய்து விசாரனை மேற் கொள்கிறனர்.

1949 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  அமைச்சர் மிதிவண்டி வழங்கினார்

திருப்பூர், செப்.6- திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதியில் 1949  அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.99  லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் விலையில்லா  மிதிவண்டிகளை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட  இயக்குநர்அ.லட்சுமணன் தலைமையில், மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் முன்னி லையில் செவ்வாயன்று பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 261 பேருக்கும், பத்மாவதிபுரம் நக ரவை மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 93  பேருக்கும், அய்யன்காளிபாளையம் அரசு  மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 419 பேருக் கும், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 322 பேருக்கும், புதுரா மகிருஷ்ணபுரம் நகரவை மேல்நிலைப்பள் ளியில் 180 மாணவியர்களுக்கும், சின்னச் சாமி அம்மாள் நகரவை மேல்நிலைப்பள்ளி யில் 226 மாணவர்களுக்கும் என மொத்தம்  770 மாணவர்கள், 731 மாணவியர் என மொத் தம் 1501 மாணவ, மாணவியர்களுக்கும் ரூ.76, 33,902 மதிப்பீட்டிலும், அருள்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மொத்தம் 74 மாணவ,  மாணவியர்களுக்கு ரூ.3,76,545 மதிப்பீட்டி லும், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 208  மாணவர்களுக்கு ரூ.10,76,400 மதிப்பீட்டி லும், பொல்லிகாளிபாளையம் அரசு  மேல்நி லைப் பள்ளியில் மொத்தம் 166 மாணவ,  மாணவியர்களுக்கு ரூ.8,40,201 மதிப்பீட்டி லும், என மொத்தம் 1949 மாணவ, மாணவியர் களுக்கு ரூ.99,77,048 மதிப்பீட்டில் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மற்றுமொரு விவசாயி உண்ணாவிரதம் தொடக்கம்

திருப்பூர், செப். 6 - பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் தனி யார் கல்குவாரி முறைகேட்டைக் கண்டித்தும், அதன் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயி விஜயகுமார் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த எட்டு நாட்களாக அவர் போராட்டத்தைத் தொடர்ந்து  வருகிறார். இந்நிலையில், எஸ்ஜி.ப்ளூ மெட்டல்ஸ் என்ற  தனியார் கல் குவாரியால் பாதிக்கப்பட்ட விவசாயி செந்தில்கு மார் என்பவர் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார் என சட்டவி ரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்து உள்ள னர்.

திருப்பூர் முருங்கப்பாளையம், ராஜம்மாள் லே அவுட்  ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு நியாயவிலைக் கடைக ளுக்கும் ஒரே விற்பனையாளர், ஒரு நாள் விட்டு ஒரு நாள்  என்ற முறையில் செயல்படுத்தப்படுவதால் பொது மக்கள்  பொருட்களை வாங்க சிரமப்படுகின்றனர். எனவே இரண்டு கடைகளுக்கும் தனித்தனி விற்பனையாளர்கள் நியமிக்க  வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளரிடம் கோரிக்கை மனு  அளித்துள்ளனர்.

தலித் ஊராட்சி தலைவர் கிராமத்தில்  உதவி தலைவரின் கணவர் முறைகேடு

ஈரோடு, செப்.6- தலித் ஊராட்சி தலைவர் கிராமத்தில், உதவி தலை வரின் கணவர் முறைகேடு ஈடுபட்டதாக பொதுமக்கள் புகார ளித்துள்ளனர்.   ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட ஈஞ் சம்பள்ளி கிராமம். இக்கிராம ஊராட்சியின் தலைவராக தானத் துபாளையத்தில் வசிக்கும் கிட்டுசாமி மகன் சுப்பிரமணி (எ)  மாயவன் உள்ளார். துணைத்தலைவராக ஜி.ஈஸ்வரி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஈஸ்வரியின் கணவர் ஏ.பி.கண பதி ஊராட்சி பணிகளில் தலையிட்டு முறைகேடுகள் செய்வ தாக மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராம மக்கள் புகாரளித் துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனது உறவினர் பெயரில் ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ள கணபதி, 15 ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தில் செங்கோடகவுண்டன் புதூர்,  வாய்க்கால்மேட்டில் ஆழ்குழாய் கிணற்றின் 7.5 எச்பி மோட்டா ருக்கு பதிலாக 2 எச்பி மோட்டார் பொருத்தி ரூ.1.65 லட்சம் சுருட் டியுள்ளார். அதேபோல பெரியவெத்திபாளையம் ஆழ் குழாய் கிணற்று மோட்டார் 7.5 எச்பிக்கு பதிலாக  5 எச்பி  மோட்டார் பொருத்தி தொகையை எடுத்துள்ளார். இதேபோல வடக்கு பொன்னம்பாளையத்திலும் முறைகேடு செய்துள் ளார். மேலும் சமுதாய கூடத்திற்கு மேல் கூரை அமைத்த வகை யில் ரூ.11 லட்சம் எடுத்து உள்ளார்.  எனவே, ஊராட்சி துணை தலைவர் ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் ஏ.பி.கணபதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்தனர். முன்னதாக இக்கிராமத்தைச் சேர்ந்த 8  வார்டு உறுப்பினர்கள், கணபதி ஊராட்சி மன்ற கூட்டத்தை முறையாக நடத்த விடுவதில்லை. தீர்மானங்கள் எழுதிய நோட்டை படித்து பார்த்து கையெழுத்திட அனுமதிப்ப தில்லை. இதற்கு காரணமான ஈஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற அனுமதி வழங்குமாறு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநரிடம் விண்ணப்பம் கொடுத் திருந்தனர்.

ஓணம் பண்டிகை: கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை, செப்.6- ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.  இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஓணம் பண் டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம் - ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் செப்.10 ஆம் தேதி இரவு  10 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, செப்.12 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஹைதராபாத் சென்ற டையும்.  இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல் கர்நாடகா மாநிலம், யஷ்வந்த்பூர் - கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (06501), யஷ்வந்த்பூரிலிருந்து செப்.7 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, செப்.8  ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்ற டையும். இந்த ரயில் கொல்லத்திலிருந்து செப்.8 ஆம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த ரயில், கோவை, திருப் பூர். ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்க ளில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையிலான சிறப்பு  ரயில் (எண்:06053), சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.7 ஆம்  தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, செப்.8 ஆம் தேதி அதி காலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். எர்ணா குளம் - சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (06054), எர்ணாகுளத்திலிருந்து செப்.9 ஆம் தேதி பிற்பகல்  2.20 மணிக்கு புறப்பட்டு, செப்.10 ஆம் தேதி அதிகாலை 4  மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடை யும்.  இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லை - பெங்களூர் கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு  ரயில் (எண்:06052), நெல்லையிலிருந்து செப்.10 ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, செப்.11 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு,  சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங் களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்

கோவை, செப்.6-  கோவை, கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கீர்த்திராஜ் (45), தனது கர்ப்பிணி மனைவி, குழந்தை மற்றும் உறவினருடன் ஆனைகட் டிக்கு சுற்றுலா சென்றார். தூவைப்பதி கொடுங்கரை பள்ளம் அருகே வந்த போது அங்கிருந்த ஆற்றின் கரை யோரம் தனது காரை நிறுத்தி விட்டு குடும்பத்தினருடன் ஆற் றில் குளிக்க சென்றார்.  திடீ ரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட் டது. இதனை உணர்ந்த  கீர்த் திராஜ் உடனே தனது குடும் பத்தினரை பத்திரமாக மீட்டு வெளியே வந்தார். ஆனால், கரையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.


 

;