districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு அழைப்பு

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு அழைப்பு நாமக்கல், மே 31- ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறதென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில், இரு சிறந்த கிராமப்புற பகுதியினை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு 2018 - 19 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.2 லட்சம்  பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே  2023 – 24 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருது களுக்கான விண்ணப்பங்களை அறிவியல் நகரம் வரவேற் கிறது. விண்ணப்பப்படிவம், விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகிய வற்றினை www.sciencecitychennai.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவியல் நகரத்திற்கு ஆக.31 தேதிக்கு முன்னர் வந்து சேருவதற்கு ஏதுவாக விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் ச.உமா அறிவித்துள்ளார்.

ஜூன் 4 ஆம் தேதி மதுபானக்கடை மூடல்

ஜூன் 4 ஆம் தேதி மதுபானக்கடை மூடல் நாமக்கல், மே 31- மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான  ஜூன் 4 ஆம் தேதி அனைத்து விதமான மதுபானக்கடை களை மூட நாமக்கல் ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளார். ஜூன் ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை அனைத்து கடைகள் (167) மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் (123) அனைத் தும் ஜூன் 4 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் நள்ளி ரவு 12 மணி வரை நாள் முழுவதும் மூடப்பட வேண்டும். மேலும், ஜூன் 4 ஆம் தேதியன்று இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங் கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலோ, மறை முகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தையை கொன்று தாய் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

சேலம், மே 31- சேலம் அருகே குடும்பத்தகராறில் குழந்தையை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம் பவம் குறித்து கோட்டாட்சியர் விசா ரணை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டி அருகே உள்ள ஏலக்காடு பகுதியைச் சோ்ந்தவர் ராஜா (30). இவரது மனைவி  ரோஷினி (22). இத்தம்பதியின் ஒன் றரை வயது மகன் நிதர்ஷன். இதனி டையே, தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜா  வழக்கம்போல வேலைக்குச் சென்றுள் ளார். வீட்டில் தனது குழந்தையுடன் இருந்த ரோஷினி, நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக் கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரோஷினி மின்விசிறியில் தூக் கிட்டு இறந்து கிடந்தார். குழந்தையும் அருகில் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த காவல் துறையி னர் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில்,  ரோஷினி குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய் தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணவர் ராஜா, அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சேலம் கோட்டாட்சியர் அம் பாயிரநாதன் கணவர் குடும்பத்தாரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை அறிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

அனுமதியில்லாத 12 அரசு பேருந்துகள்

நாமக்கல், மே 31- நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு பேருந்து களுக்கு முறையாக அனுமதி இல்லை என  போக்குவரத்து அலுவலர் விளக்கம் அளித் துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தகுதியில்லா பேருந்துகளை செப்.30 வரை இயக்க அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது. நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு போக்குவரத்து கழகத் தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. அதில் 34 பேருந்துகள் புற நகர் பேருந்துகளாகவும், 30 பேருந்துகள் கிரா மப்புற பேருந்துகளாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் கிராமப்புற பேருந்துகள் பெரிதும் தகுதியில்லா பேருந்துகளாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில், குமாரபாளையத்தில் இருந்து  திருச்செங்கோடு வழியாக வரும் 8 ஆம் நம் பர் பேருந்துக்கு தகுதிச் சான்றிதழ் அளிக்கப்ப டவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலை யில், திருச்செங்கோட்டில் புறநகர் பேருந்துக ளாக இயங்கி வரக்கூடிய 12 பேருந்துகளுக்கு முறையாக அனுமதியில்லை என திருச் செங்கோடு வட்டார போக்குவரத்து அலு வலர் தெரிவித்துள்ளார்.

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

தருமபுரி, மே 31- உடலுறுப்பு தானம் செய்த மொரப்பூ ரைச் சேர்ந்தவரின் உடலுக்கு அரசு அதிகாரி கள் மரியாதை செலுத்தினர். தருமபுரி மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந் தவர் முனிராஜ். இவர் திருப்பூர் மாவட்டத் தில் பால் வியாபாரம் செய்து வந்த நிலை யில், உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அவரது வீட்டில் வைக் கப்பட்டிருந்த உடலுக்கு வருவாய் கோட்டாட் சியர் வில்சன் இராஜசேகர், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

ஆட்சியர் வேண்டுகோள் சேலம், மே 31- வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடை பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சேலம் மாவட்டத் தேர்தல் அலுவல ரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள் ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேட்பாளர்கள், முகவர்கள், அலுவ லர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட் டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரா. பிருந்தாதேவி பேசுகையில், சேலம் மாவட் டத்தில் கடந்த ஏப்.19 ஆம் தேதி சேலம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் தொகுதியில் பதி வான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட வுள்ளது. சேலம் மக்களவை தொகுதியில் பதி வான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 14 மேசைகள்  அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். ஒவ் வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒவ் வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் அதன் முடிவுகளைத் தேர்தல் நடத் தும் அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டு, பின் னர் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கும் பலகையில் ஒவ்வொரு வேட்பா ளர் பெற்ற வாக்குகள் எழுதப்படுவதோடு அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பதற் காக ஒவ்வொரு வேட்பாளரின் சார்பில் அவர் களின் முகவர்களுக்கு அடையாள அட்டை கள் வழங்கப்படவுள்ளன. எனவே, செவ்வா யன்று (ஜூன் 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடைபெற வேட்பாளர்கள், முகவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்புத்தர வேண்டும், என்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர் அழுகிய நிலையில் மீட்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர் அழுகிய நிலையில் மீட்பு தருமபுரி, மே 31- காரிமங்கலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அழுகிய நிலையில் சடல மாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மணிக்கட்டி யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான சிவன் (38).  இவரது மனைவி நந்தினி (26). இவர்களது மகன்கள் அபி னேஷ் (6), தர்சன் (4). இந்நிலையில், வெள்ளியன்று காலை  இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி யினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நந்தினி  மற்றும் 2 குழந்தைளும் இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டன. சிவன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலை யில் காணப்பட்டார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு ஆய்வு செய்யபட்டதைத் தொடர்ந்து, 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 3 நாட்களுக்கு முன் னர் சம்பவம் நடந்துள்ளதாகவும், 2 நாட்களுக்கு முன்னரே  மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை  செய்துவிட்டு பிரேதத்தை வீட்டிலேயே வைத்திருந்தவர், என்ன செய்வதென்று தெரியாமல் போலீசுக்கு பயந்து அருவா மனையால் தனது கையின் நரம்பை வெட்டிக் கொண்டு தற் கொலைக்கு முயன்றிருக்கலாம். கடன் பிரச்சனையா? அல் லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல கோணங்க ளில் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றனர்.

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம் நாமக்கல், மே 31- பள்ளிபாளையம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஒரு  தனியார் திருமண மண்டபத்தில் குமாரபாளையம் ரோட்டரி  சங்கம், தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியன் மற்றும்  அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நெசவாளர்களுக் கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில்  கண் புரை, சர்க்கரை நோய் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு,  முகாம் நடக்கும் இடத்திலேயே குறைவான விலையில் கண்ணாடி வழங்கப்பட்டது.

ஆன்லைன் கடன் செயலி மோசடி: 3 பேர் தற்கொலை முயற்சி

ஆன்லைன் கடன் செயலி மோசடி: 3 பேர் தற்கொலை முயற்சி திருப்பூர், மே 31- பல்லடத்தில் ஆன்லைன் கடன் செயலி மோசடியால் ஒரே  குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியை  சேர்ந்தவர் ராஜீவ்(28). இதே பகுதியில் உள்ள ஒரு நூல் மில் லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வியாழ னன்று ராஜிவ், மனைவி விஜி (26), மகள் வின்சிலின்(6) ஆகி யோர் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உட்னடியாக ஆவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து,  அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில், ஆன்லைன் கடன் செயலி மூலமாக  சிறிய தொகை கட்டினால் பெரும் தொகை கடனாக வழங்கப்ப டும் என்பதை நம்பி ராஜீவ் அவரது நண்பர்களிடம் ரூ.40 ஆயி ரம் வரை கடன் வாங்கி, ஆன்லைன் செயலியின் வங்கி கணக் கிற்கு செலுத்தி உள்ளார். ஆனால், ஆன்லைன் செயலி முடங் கியுள்ளது. இதனால் ராஜீவ் கடன் பெற முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும், நண்பர்கள் கடனை திருப்பி கேட்டுள் ளனர். இதன் காரணமாக ராஜீவ் தனது மனைவி, குழந்தையு டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசா ரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் கடன் செயலி  மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலர் கடன்  வாங்கி வருகின்றனர். இந்நிலையில் பல்லடத்தில் ஆன்லைன்  கடன் செயலி மோசடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோயில் என அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோயில் என அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை திருப்பூர், மே 31- இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் வழி பாடும் கோயில் என்று அறிவிப்புப் பலகைகளை வைக்க  வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரியுள் ளது. விசிக மகளிரணி மாவட்டச் செயலாளர் காளியாதேவியின் இரங்கல் கூட்டம், பொங்குபாளையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் பேசும்போது, இங்குள்ள கோவில், அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்று 30  ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்துள்ளது. எனவே அரசு,  இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத் துக் கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் வழிபடும்  கோயில் என்று  அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும்.  அனைத்து சமூக மக்களும் வழிபாடு நடத்துவதற்கான நடவ டிக்கைகளை சமரசமின்றி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்.

ஜூன் 4 மதுபான கூடங்கள் செயல்படாது
திருப்பூர், மே 31- திருப்பூர் மாவட்டத்தில் வரும் 4 ஆம் தேதி பாராளுமன்ற  தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஒரு நாள் மட்டும்  மதுபான கூடங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ளா அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 பாராளு மன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு முழுவ தும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர்  மாவட்டத்தில் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12  மணி வரை எவ்வித மதுபான விற்பனையும் செய்யக்கூடாது.  அரசிடமிருந்து கொள்முதல் செய்யும் மதுபானங்களை சில் லறை விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லவும் விற் பனை செய்யவும் கூடாது. தமிழ்நாடு மாநில கழகத்தின் கீழ்  இயங்கி வரும் மதுபான கடைகள் அவற்றுடன் செயல்படும்  மதுபானக்கூடங்கள், மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளு டன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மது பான கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு  உத்தரவிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

விதிமுறைக்குப் புறம்பாக கட்டிய கட்டிடத்திற்கு சீல்

திருப்பூர், மே 31 - திருப்பூரில், விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டிய கட்டடத்தில், செயல் பட்டு வந்த பனியன் நிறுவன பொருட் களை அப்புறப்படுத்தி, மாநகராட்சி அதி காரிகள் கட்டிடத்திற்கு சீல் வைத்த னர். திருப்பூர் பாண்டியன் நகரில், வேலு மணி என்பவர், குடியிருப்புக்கான கட்ட டம் கட்ட மாநகராட்சியில் அனுமதி பெற் றார். ஆனால் வணிக பயன்பாட்டிற்கான  கட்டிடம் கட்டியதாகத் தெரிகிறது. மாநக ராட்சி விதிகளின்படி போதிய இடை வெளி விடாமல் கட்டியதாக அப்பகு தியைச் சேர்ந்த குப்புராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இதனை தொடர்ந்து, நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் கட்டிடத்திற்கு சீல்  வைக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தர விட்டது. இதையடுத்து, மாநகராட்சி  அதிகாரிகள் கட்டிட உரிமையாளருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.  இருப்பினும், கட்டட உரிமையாளர்  வேலுமணி பனியன் நிறுவனத்திற்கு அக்கட்டிடத்தை வாடகைக்கு விட்டிருந் தார். மாநகராட்சி வழங்கிய காலக்கெடு ஆறு மாதங்களுக்கு மேலாகி, நிறைவ டைந்ததால்மாநகராட்சி நகரமைப்பு பிரிவை சேர்ந்த அலுவலர்கள், சுகா தாரத் துறை அலுவலர்கள் நெருப்பெரிச் சல் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி,  உள்ளூர் திருப்பூர் மாவட்ட திட்டக்குழு அலுவலர்கள், போலீசார் ஆகியோர் அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பனியன் நிறுவனத்தின் பொருட்களை அப்புறபடுத்தி விட்டு, ரூ. ஐம்பது லட் சம் மதிப்பிலான கட்டடத்தைப் பூட்டி சீல்  வைத்தனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், மே 31 - திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெற்ற  ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங் கத்தினர் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியம் பெருமாள்பா ளையம் ஊராட்சி மீது நடவடிக்கை எடுப்பது போல் திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் முறைகேடுகள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சிகளில் நடந்த பல்வேறு  முறைகேடுகள், பிரச்சினைகள் தொடர்பாக ஊராட்சி தலை வர், ஊராட்சி செயலாளர் உட்பட ஒன்றிய ஆணையர், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள், தணிக்கையாளர்கள், உதவி இயக்கு நர் உள்பட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, உள்ளாட்சி  நிதி தணிக்கைத் துறை அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ரூ.2.40 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர், மே 31, வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  107 மூட்டை சூரியகாந்தி விதை ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனை யானது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு ஆண்டிப்பட்டிகோட்டை, ராமகவுண்டனூர், கொல்லபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 6 விவசாயிகள், 107 மூட்டை சூரிய காந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, சித்தோடு, பூனாச்சி, காங்கயத்தைச் சேர்ந்த 4 வணிகர்கள் சூரியகாந்தி விதையை வாங்க வந்திருந்தனர். சூரியகாந்தி விதை கிலோ ரூ.38.74 முதல் ரூ.47.74 வரை விற் பனையானது. சராசரி விலை ரூ. 46.74. ஒட்டுமொத்த விற்ப னைத் தொகை ரூ.2.40 லட்சம் ஆகும்.

போக்குவரத்து கழகத் திருப்பூர் மண்டல பொதுமேலாளர் சஸ்பெண்ட்

திருப்பூர் மே 31 – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண் டல பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் மாரியப்பன். இவர் மே மாதத்துடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலை யில் அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் இருந்த தால் கடந்த 25ஆம் தேதி மாரியப்பன் பணி இடை நீக்கம் செய் யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் காட்டியது, வழித்தட ஒதுக்கீட்டில் தனி யார் நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்பட்டது உள்ளிட்ட  பல்வேறு புகார்கள் மாரியப்பன் மீது சுமத்தப்பட்டன. இதை யடுத்து மாரியப்பனை பணி இடை நீக்கம் செய்த தாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். அதேசமயம் மாரியப்பன் போக்குவரத்து தொழிலா ளர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடியவர். நீண்ட  விடுப்பு கோரிக்கை, பணி இட மாறுதல் கோரிக்கை ஆகியவற் றில் அவர் தொழிலாளர்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டு  உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தற்போது அவர் முறைகேடு புகார் காரணமாக பணி இடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களில் அவர்  பிறப்பித்த உத்தரவுகளையும் போக்குவரத்து நிர்வாகம் ஆய்வுக்கு உட்படுத்தி, பாரபட்சமான, தொழிலாளர் விரோத மான உத்தரவுகளை கைவிட வேண்டும் என்று தொழிலா ளர்கள் கூறினர்.

தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு

ஈரோடு, மே 31- ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு தீ தடுப்பு  நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோபி தீய ணைப்புதுறை சார்பில் நடைபெற்றது. கோபி வட்டாரத் தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இத்திட்டத்தை  செயல்படுத்த நியமிக்கப்பட்டு உள்ள மைய பொறுப்பா ளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி யூனியன் அலு வலக குடியிருப்பு வளாகத்தில் கோபி தீயணைப்பு நிலைய  பொறுப்பு அலுவலர் முருகன், மாதப்பன், முன்னனி தீய ணைப்பு வீரர் கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம் முன்னிலை யில் நடைபெற்றது. இவர்களுக்கு தீ தடுப்பு குறித்தும், தீ விபத்து ஏற்படும்  காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித் தும் தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்க தீயணைப்புத்து றையினருக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சிறையில் சிறைவாசி உயிரிழப்பு

கோவை, மே 31-  நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்தவர் ரங்கன் (30). இவர் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக் கில் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நீரிழிவு  நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக கோவை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக கோவை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த னர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதுகுறித்து பந்தயசாலை போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

பிறப்பு சான்றிதழ் பதிவிட கால அவகாசம்

ஈரோடு, மே 31- பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க கூடுதல் கால  அவகாசத்தை ஈரோடு மாநராட்சி வழங்கியுள்ளது-  குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப் பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலி ருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், எழுத்து வடிவிலான உறுதிமொழியை பதிவாளரி டம் அளித்து எவ்வித கட்டணமின்றி பெயர் பதிவு செய்தி டலாம். 12  மாதங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம்  ரூ.200 செலுத்தி பதிவு செய்திட பிறப்பு இறப்பு பதிவுச்சட் டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பதிவு செய்யபட் டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு  செய்யாமல் இருப்பின், உரிய ஆவணங்களுடன் (பிறப்பு  சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை நகல்,  வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை) ரூ.200/-  காலதாமத கட்டணம் செலுத்தி ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன்பெறலாம் எனவும், இந்த கால அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்திகொள்ள வேண் டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குப்பை அள்ள புகார் கொடுத்த இளைஞர் மீது தாக்குதல்

மே.பாளையம், மே 31- குப்பைகள் எடுக்க நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்த இளை ஞர் மீது கவுன்சிலரின் கணவர் மற்றும் மகன்  தாக்குதல் நடத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகராட்சிக்கு உட்பட்ட  23 ஆவது வார்டு ரயில்வே காலனிப்  பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் மேற் கொள்ளாததால் அந்த பகுதி முழு வதும் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட் டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து  அந்த பகுதியைச் சேர்ந்த இளை ஞர் கவுதம் என்பவர், 23 ஆவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதாபுருஷோத்தமனிடம் புகார ளித்துள்ளார். அதன் பிறகும் நட வடிக்கை எடுக்காததால் மேட்டுப் பாளையம் நகராட்சியில், இதுகு றித்து இளைஞர் கவுதம் புகார ளித்துள்ளார்.  இந்நிலையில் வெள்ளியன்று அந்த பகுதியில் தூய்மைப் பணிக ளுக்காக, தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர். இதனையறிந்து கோபமடைந்த காங்கிரஸ் 23 ஆவது வார்டு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருசோத்தமன் மற்றும் அவரது மகன் ஆகியோர்,  தூய்மைப் பணிகளை மேற் கொள்ள வந்த தூய்மைப் பணியா ளர்களை இங்கு தூய்மைப் பணிகள்  செய்யவேண்டாம் என்று தெரிவித் தனர். மேலும்,  கவுதமிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, முற்றிப்போக கவுதமை தாக்கியும் உள்ளனர். இதில் கவுதமுக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் ஆம்பு லன்ஸ் மூலம் கோவை அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இளைஞர் கவுதம் கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் கவிதா, கணவர் புருசோத்தமன், மகன் கார்திக், நண்பர் நசீர் ஆகியோர் மீதும், கவுன்சிலர் கவிதா கொடுத்த புகா ரின் பேரில் இளைஞர் கவுதம் மற்றும் இவரது தாயார் பிரபா வதி ஆகியோர் மீதும் மூன்று பிரி வுகளின் கீழ் வழக்கு பதிவு செய் துள்ள போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு, மே 31- ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகையால் 90 சதவிகித மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்க ரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட் டுச்சந்தை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 16-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் ஈரோடு மாட் டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகள், ரொக்கப் பணம் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் மாட்டுச்சந்தை விற்பனை கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. தென்மாநிலங்க ளில் தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,  தேர்தல் நடத்தை விதிகள் இருந்தபோதிலும், பெரிய அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லாத  நிலையில், வியாழனன்று நடந்த ஈரோடு சந்தைக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற வெளி  மாநில வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக எண் ணிக்கையிலான வியாபாரிகள் மற்றும் விவ சாயிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால்  சந்தைக்கு கொண்டு வரப்பட்ட 90 சதவீத மாடு கள் விற்பனையாகின. இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாட்டுச்சந்தையில் 350 பசுமாடுகள், 300 எருமைகள், 70 கன்று கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனையாகின. கன்றுகள் ரூ.5,000 மதிப்பிலும், எருமைகள் ரூ.25 ஆயி ரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும், பசுமாடு கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை யிலும், கலப்பின மாடுகள் ரூ.70 ஆயிரத் துக்கு மேலும் விற்பனையாயின என்றனர்.

டிஆர்இயு பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம்

ஈரோடு, மே 31- டிஆர்இயு பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் ஈரோடு  ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. எட்டு மணி நேர வேலை, தேவைக்கேற்ற குறைந்தபட்ச  ஊதியம், தற்காலிக பணியாளர்களின் பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே  தொழிலாளர்கள் கடந்த 1974ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்சிண ரயில்வே எம்ப்ளா யீஸ் யூனியன் உள்ளிட்ட 110 தொழிற்சங்கங்கள் இணைந்து,  17 லட்சம் ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட் டத்தை நடத்தினர். இந்திய அரசியலை புரட்டிப்போட்ட அந்த  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவீரர்களைக் கௌரவிக்கும் பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையம் முன்பு நடை பெற்ற பொதுக்கூட்டத்தை முதுபெரும் தொழிற்சங்க தலை வர் கே.துரைராஜ் தொடங்கி வைத்தார். டிஆர்இயு சேலம் கோட்டச் செயலாளர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் பிஜு, கிளைச் செயலாளர் ஸ்ரீஜித், ஓய்வூதியர் சங்கத் தலைவர் சி.முருகேசன் ஆகியோர் உரை யாற்றினர். 1974 போராட்ட களநாயகர்களான டி.வி.மணி,  பி.சுப்பிரமணியன், ஜி.வேணுகோபால், கே.குழந்தைசாமி, தங்கமுத்து, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோட்டப்  பொருளாளர் குமரேசன், செயலாளர் சுரேஷ்குமார், ரியாஸ்  ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். டிஆர்இயு கோட் டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை

ஈரோடு, மே 31- ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் தற் போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணி கள் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் கான்கி ரீட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அர சாணை எண் 276ஐ மாற்றியமைக்கக் கோரி  கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தி னர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த னர். அதன் அடிப்படையில் அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு புதிய அரசாணை  (எண் 60) கடந்த 10 -ஆம் தேதி வெளியிடப்பட் டது. இதன்படி, கீழ்பவானி வாய்க்காலில் புதுப்பித்தல் மற்றும் மராமத்துப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிரித்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில், வாய்க்காலின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில், நீர்வளத் துறை அதிகாரிகளும் முறை யாக, சரியான தகவலை தெரிவிக்க வேண் டும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக் கத்தினர் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை – 4 பேர் கைது

கோவை, மே 31- கோவையில், தடை செய்யப்பட்ட லாட் டரி சீட் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை போ லீசார் கைது செய்தனர்.  கோவை துடியலூரில் இருந்து சரவணம் பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஸ்கோடா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள  மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. மேலும், இது குறித்து வாகனத்தில்  வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்ப னையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும்  அந்த வாகனத்தில் வைத்திருந்த 5 லேப் டாப்கள், 9 செல்போன்கள் மற்றும் ரூபாய்  1 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசார ணையில் துடியலூர் அருகே உள்ள ஜி.என்  மில் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார்,  பிரதீப், நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதிஷ் கண்ணா மற்றும் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரி யவந்தது. அதில் தலைமறைவான பிரபு என்ப வரை காவல் துறையினர் தேடி வருகின்ற னர். இவர்கள் அனைவரும் கோவையில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவா ளிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள்  நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன் றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறை யில் அடைத்தனர். மேலும் பிரபு என்பவரது  வங்கி கணக்கில் இருந்த 18 லட்ச ரூபாய்  பணத்தை முடக்கியுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் மகன் மருத்துவ செலவுக்கு உதவ தாய் முறையீடு

ஈரோடு, மே 31- பெயின்டிங் வேலையின் போது விழுந்து காயமடைந்தவரின் சிகிச்சை தொகையை செலுத்த உதவ வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் மனு அளித்தனர். ஈரோடு அருகே பேரோடு, கரட்டுப்பா ளையத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் தனது தாய் சம்பூரணம் (62), தம்பி தமிழரசன்(29) ஆகியோருடன் வசிக்கிறார். தமிழரசனுக்கு திருமணமாகவில்லை. பெயிண்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 8 ஆம்தேதி ஈரோடு, லக்காபுரம், வி.ஐ.பி நகர், 3ஆம் வீதியில் ஒரு வீட்டில் தமிழரசன் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவ மனையில் அவரை சேர்த்தனர். ஆனால், வீட்டின் உரிமையாளர், தனியார் மருத்து வமனையில் சேர்த்து விடும்படியும், தான் செலவுகளை செய்வதாக தெரிவித்ததை யடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து, 4.86 லட்சம் ரூபாய் செலவானது. தொகையை செலுத்தினால்தான், தமிழர சனை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. வீட்டு உரிமையாளரோ பணம் வழங்க மறுக்கிறார். என்ன செய்வது என்றே தெரியாமல் நாங்கள் பரிதவிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு எங்கள் தமிழரசனை மீட்டுத்தர வேண்டும் என மனு அளித்தனர்.

தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை

நாமக்கல், மே 31- தேசிய அளவிலான வில்வித்தைப் போட் டியில் கலந்து கொண்டு, தங்கம் பதக்கம் வென்ற வெப்படை தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை காவல் நிலையத் தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வரு பவர் பிரவீன் குமார். இவரது மனைவி குமார பாளையம் போக்குவரத்து காவல் நிலைய எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர்க ளுக்கு லியா ஸ்ரீ, கிருத்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும்  குழந்தை பருவம் முதலே வில்வித்தை பயிற்சி யில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வருடம் மாநில  அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட இருவரும் தங்கப்பதக் கம் வென்று அசத்தினர். இதனைத்தொடர்ந்து தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் பங்குபெற தேர்வு செய்யப்பட்ட லியாஸ்ரீ மற்றும் கிருத்திக் ஆகியோர், ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து 3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில், 10 வயது பிரிவில் கலந்து கொண்ட கிருத்திக் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோன்று 12 வயதிற்கான வில்வித்தைஙப போட்டியில் கலந்து கொண்ட லியாஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற காவலரின் குழந்தைகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகளும், பொது மக்களும் பாராட்டுகள் தெரிவித்து வரு கின்றனர்.

ஈரோட்டில் மீண்டும் உச்சம் தொட்ட வெயில்

ஈரோடு, மே 31- கோடை மழை முடிவுக்கு வந்த நிலை யில் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் மீண்டும்  அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் மாத தொடக் கம் முதல் அதிக அளவில் வெப்பம் பதி வாகி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 27  நாள்கள் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதி வாகியது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பம் பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 4- ஆம்  தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய தால் வெயிலின் தாக்கம் மேலும் அதிக ரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால்,  ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லும் கடந்த இரு வாரங்களாக பெய்த தொடர்  மழையால் அக்னி நட்சத்திர வெப்பத்தின் பாதிப்பு குறைந்தது. தற்போது கோடை மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரோட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் தொடங்கியுள்ளது. கடந்த 28, 29 ஆம் தேதிகளில் ஈரோட்டில் 100  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலை யில் வியாழனன்று 103.64,  வெள்ளியன்று 105  டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த 20 நாள்க ளுக்கு பிறகு ஈரோட்டில் மீண்டும் வெப்ப நிலை அதிகரித்து இருப்பதால் பொதுமக் கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.


 


 

 


 

;