திருப்பூர், அக். 21 - பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வு பெற்றோர் சங்கத் தின் 14ஆவது அமைப்பு தினம் திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அமைப்பு தினக் கூட்டத்திற்கு சங்கத்தின் சார்பில் தண்ட பாணி தலைமை ஏற்றார். ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன், நிர்வாகி முகமது ஜாபர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் குமர வேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர். இதில் ஓய்வு பெற்றோர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திரளா னோர் கலந்து கொண்டனர். நிறைவாக என்.ராமசாமி நன்றி கூறினார்.