districts

ஒருவேளை உணவுக்காக தெருவில் வந்தாண்டி

“பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டீ… டும் டும் மேளம் கொட்டி சேதி சொன்னான்டீ” என்ற பழைய திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். அது என்ன பூம்பூம் மாடு? அவர்களின் வாழ்நிலை என்ன?

 2000ஆவது ஆண்டு வரை பரவலாக காணப்படும் இந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் இனம் தற்போது நம் கண்களில் படுவதே இல்லையே, என்ன ஆனார்கள் அவர்கள் ? திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளை யம் என்னும் ஊரில் சின்ன செங்காத்துக் குளமேடு கிராமத்தில் 50 வருடமாக 15 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மாட்டை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றன. பூம் பூம் மாட்டுகாரர்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் அணைக்கட்டு கிராமத்தில் சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

காளை மாட்டின் முதுகின் மேல் உள்ள திமில் வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய துணி களால் போர்த்தியபடி அலங்காரம் செய்ய பட்டிருக்கும். கொம்புகளில் வர்ணம் தீட்டி, கழுத்திலும் காலிலும் சலங்கை கட்டி, பூ மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட மாட்டைத் தான் பூம்பூம் மாடு என்பார்கள் . முண்டாசு கட்டிய மெலிந்த தேகத்துடன் பீப்பி ஊதிக்கொண்டு வீடுவீடாகச் சென்று யாசகம் கேட்டு மணி ஓசை ஒலியுடன் வருபவர் தான் பூம்பூம் மாட்டுக்காரர். தனது எஜமானரின் பேச்சுக்கெல்லாம் தலையாட்டி, தன் விசுவாசத்தை காட்டி குழந்தை களை கவரும் அந்த மாட்டின் அழகே அலாதி யானது. மாட்டுக்காரரின் உடல்மொழி, ஒசை ஆகியவற்றைப் புரிந்து கொண்டு தலையை ஆட்டுவது, நடனம் ஆடுவது, கால்களை மாறி மாறி உயர்த்தியும், மடக்கியும் வணக்கம் செலுத்துவது ஆகிய காட்சிகள் பார்ப்போரை மகிழ்விக்கும் நிகழ்வாகும். எதுகூறினாலும் எதிர்க்கேள்வி கேட்காமல் தலையாட்டும் நபருக்கு பூம்பூம் மாடு என்ற பட்டபெயர் சூட்டு வது இயல்பு. அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர் கேள்வி கேட்பதும், அக்கேள்வி களுக்கும் ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன் களைச் சொல்லுவது வேடிக்கையாக இருக்கும்.

பூம்பூம் மாட்டுக்காரர் தனது மாட்டை வீடுகள் தோறும் அழைத்துச் சென்று ஒரு சில பாடல்களை பீப்பியில் நயத்தோடு வாசித்து அரிசி, காசு பெற்று தன் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் துணிப்பையில் போட்டுக் கொள்வார். தன் குடும்பத்தையும், அந்த காளையையும் காப்பாற்றும் கடப்பாடு கொண்டவர் தான் இந்த மாட்டை காப்பாற்றி வருகிறார். உண்மையில் அவரையும் அந்த குடும்பத்தையும் பசியின்றி பாதுகாப்பது அந்த பூம்பூம் மாடுதான் என்றால் மிகையாகாது. இவர்களுக்கென்று நிரந்தர மான வீடோ, சொத்துக்களோ, நிலபுலன்களோ கிடையாது. இவர்களில் பெரும்பாலானோர்க்கு வாழ்வதற்கு தேவையான எவ்விதச் சான்றி தழ்களும் (ஆதார், குடும்ப அடையாள அட்டை, வீட்டுப் பட்டா, சாதிச் சான்றிதழ்) ஆதாரங்களும் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விடய மாகும். வாழ்வாதாரத்திற்கான ஆவணங்கள், சான்றிதழ்கள் இல்லாமல் இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

இதுகுறித்து பெரியபாளையம் செங்காத்துக்குளமேடைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பேசும்போது, சாதிச் சான்றிதழ் இல்லா மல் எங்கள் குழந்தைகள் பள்ளி முடிக்க முடியா மல் அவதிப்படுகின்றனர். உயர்கல்வி என்பது எங்களுக்கு பகல் கனவாகிக் கொண்டிருக்கி றது. அரசால் வழங்கப்படும் சலுகைகள் கிடைப் பது இல்லை, குடும்ப அட்டை பெற முடியாமல் விலையில்லா அரிசி கூட எங்களால் பெற முடியவில்லை. இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் எங்களை நவீன காலத்து நாடோடிகள் என்று அழைக்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ள பெரிய வீட்டுத் திண்ணை யிலும், மரத்தடியிலும் தஞ்சம் புகுந்து அப்பகுதி யினர் கொடுக்கும் உணவுகளை உண்டு, உறங்கி வாழ்நாட்களை கடத்துகிறோம்.

 எங்கள் இனத்தினர் கிருஷ்ணகிரி, காவிரிப் பூம்பட்டினம், கோயம்புத்தூர், சங்கரன்கோவில், திருச்செந்தூர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், விழுப்புரம், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளுர், தர்மபுரி, நாகப்பட்டி னம், பொரக்குடி, நீலாம்பாடி ,திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி, வடலூர், அரசூர், ஆகிய இடங்களில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.  குறிசொல்லுதல் எங்கள் குலத்தொழிலாக இன்றளவும் இருந்து வருகிறது. எங்கள் பரிதாப மான வாழ்க்கை நிலை மாற வேண்டுமானால், ஒன்றிய, மாநில அரசுகளின் நல்வாழ்வு திட்டங் கள் அவசியமாகிறது. எங்கள் மக்கள் பசியின்றி சுயமரியாதையுடன் வாழ அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார். எங்களை போன்றுள்ள கழைக் கூத்தாடிகள், சாட்டை அடித்து கொள்பவர்கள், கொட்டு அடித்துக்கொண்டு தெருக்களில் கம்பியின் மேல் நடந்து சாகசம் செய்பவர்கள், மக்களை மகிழ்விப்பவர்கள் என இம் மக்களை ஆய்வு செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பி.மீனா

;