districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்க  திருப்பூரில் சைக்கிள் பேரணி

திருப்பூர், நவ. 27 - திருப்பூரில் சுற்றுச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை  பாதுகாக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 600க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது  மற்றும் உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்துவது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் ரைடர்ஸ்  கிளப் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடை பெற்றது. திருப்பூர் சிட்கோ பகுதியில் நடைபெற்ற இந்த பேரணி  மூன்று பிரிவுகளாகவும், இரண்டு சுற்றுகளாகவும் நடை பெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போட்டியில் வெற்றி  பெற்றோர் மற்றும் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

உக்கடம் மேம்பாலம் பணி :  பில்லர் அமைக்கும் பணி தீவிரம்

கோவை, நவ.27- கோவை-உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான  மேம்பால பணிகளில் நொய்யல் ஆற்றில் 3 இடங் களில் பில்லர் அமைக்கும் பணி அண்மையில் பெய்த  மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது  மீண்டும் அந்த பணிகள் துவங்கி விறுவிறுப்பாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை, உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளாவிற்கு செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச் சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக  உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம்  மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  துவங்கியது. இதில், உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே  உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்ட மாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55  தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி  நடந்து முடிந்தது.  மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம் பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம் பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில்  இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக் கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ  மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. மேலும் உக்கடத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத் திற்கு முதல் கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில்  உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரி வித்தனர். இதனிடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆத்துப்பாலம் சந்திப்பு பகுதியில் ஏறு,  இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. உக்கடம் -  வாலாங்குளம் ஏறு, இறங்கு தளம் 623 மீட்டர் தூரத்திற்கும், ஆத்துப்பாலத்தில் ஏறு, இறங்கு தளம் 1051 மீட்டர் தூரத் திற்கும் நடத்தப்படவுள்ளது. 4 வழிப்பாதை விரிவாக்க 733  மீட்டர் தூரத்திற்கு நடத்தப்படும். ஆத்துப்பாலம் ஏறு, இறங்கு  தளம் அமைக்கும் பணிக்காக நொய்யல் ஆற்றின் நடுவில்  மேம்பால தூண்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டிருக்கிறது. மேம்பாலத்தில் தூண்கள் 12 மீட்டர்  உயரத்திற்கு 3 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆத்துப்பாலத்தின் மேற்கு பகுதி ஆற்றிலும், கிழக்கு பகுதி யிலும், மைய பகுதியிலும் தூண்கள் அமைக்கப்படும். மையப் பகுதியில் இரு பாலத்திற்கு இடையே உள்ள இடை வெளியை பயன்படுத்தி தூண் அமைக்கப்படுகிறது. இந் நிலையில் அன்மையில் பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகமாக இருந்ததால் நொய்யல் ஆற்றில் பில்லர்  அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறு கையில்,  நொய்யல் ஆற்றில் முறையான மண் பரிசோதனை  செய்யப்பட்டு பில்லர்கள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அன்மையில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.  அதன்பின் நீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால்  பில்லர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும்  பில்லர் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் இப் பணிகள் நிறைவடையும், என்றார்.

போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை

ஈரோடு, நவ.27- ஈரோட்டில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோட்டில் ஒன்றரை ஆண்டுக்கு முன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை அருகிலிருந்த அசோகன்  (58) என்ற தொழிலாளி பாலியல்  ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்யப்பட்டது. இவ் வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று அளிக்கப்பட்டது. அதில் அசோகனுக்கு 5 வருட சிறை  தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அப ராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,பாதிக்கப்பட்டவருக்கு  அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையில் குறைபாட்டால் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு 

திருப்பூர், நவ.27- அறுவை சிகிச்சை குறைபாட்டால் ஏற்பட்ட மருத்துவ செலவு, மன உளைச்சல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புனிதா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம்  தேதியன்று கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இதனால் அனுப்பர்பாளையம் உள்ள ஒரு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கையில் பிளேட் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சை அளித்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் சீல் வடிந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் குணமாகவில்லை. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனிதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது வைக் கப்பட்ட பிளேட் சரியாக பொருத்தப்படாமல் சீல் வடிந்தது  தெரியவந்தது. இதைதொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குணமானார்.  இதுகுறித்து, சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ மனையில் புனிதா கேட்டதற்கு, மருத்துவமனை நிர்வாகம்  முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து புனிதா திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரிக்கப்பட்டது.  விசாரணை முடிவில் புனிதாவுக்கு, கோவையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொகை ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 185, மருத்துவ செலவு  தொகை ரூ.5 ஆயிரத்து 674, மன உளைச்சலுக்கு இழப் பீடாக ரூ.75 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம்  ஆகியவற்றை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதி மன்றம் தலைவர்  தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

பெண் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

தருமபுரி, நவ.27- நல்லம்பள்ளி அருகே உள்ள பூவல்மடுவு உயர்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், டொக்கு போதன அள்ளி ஊராட்சியில் உள்ள பூவல்மடுவு என்னும் கிரா மத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி  பயின்று வருகின்றனர். இதில் 70க்கும் மேற்பட்டோர் மாணவி கள் ஆவர். ஆனால், இப்பள்ளியில் ஒரு பெண் ஆசிரியர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் படிக்கும் மாணவி யர்கள் தமது இயற்கை உபாதைகள் மற்றும் உடல் மாறுபாடு கள் குறித்து ஆண் ஆசிரியர்களிடம் பகிர முடியாத நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் சார் பில் பெண் ஆசிரியர் வேண்டுமென்று கோரிக்கையை தீர்மா னமாக நிறைவேற்றி தருமபுரி மாவட்ட கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தீர்மான அறிக்கை கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் பயின்று வரும் பெண் பிள்ளைகளின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பஞ்சா யத்து நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் மாவட்ட கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் செவி சாய்க்கவில்லை. எனவே, இப் பள்ளியில் கல்வி பயின்று வரும் 70க்கும் மேற்பட்ட மாணவி களின் நலனைக்கருதி  உடனடியாக பெண் ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், மாணவி களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

சேலம், நவ.27- ஆத்தூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத் தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம், விஜயரங்கபுரத்தைச் சேர்ந்த 16 பேர் ஒரு வேனில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தர்காவுக்கு சென்றனர். அங்கிருந்து சனியன்று அதிகாலையில் வேன் மூலம் ஊருக்கு ஆத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். கொத்தம்பாடி அழகாபுரம் பிரிவு ரோடு பகுதியில் வந்த போது வேனின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் ஓட்டுநர் முஸ்தபா (வயது 32), சரோஜா (53), சாந்தி (48), சேக் உசேன் (17), கிருஷ்ணமூர்த்தி (54), பத்மன் பீவி (38), ஷேக் பாஷா  (59), காசிம் (65), ராஜாமணி (45) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடி யாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் சட்டக்கல்வி கிடைக்கும் நாமக்கல்லில் அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு 

நாமக்கல், நவ.27- தமிழகத்தில் 19 அரசு சட்டக்கல்லூரி, 9 தனியார் கல்லூரி கள் உள்ளதால், அனைவருக்கும் சட்டக்கல்வி கிடைக்கக் கூடியதாக உள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15 ஏக் கர் பரப்பளவில் ரூ.92 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரி புதிய கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிக ளுக்கு விடுதி கட்டிடம், ஆசிரியர்களுக்கான கட்டிடம், கலை யரங்கம், விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு கட்டி டங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்று லாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமை வகித்தார். அப்போது  அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், சட்டம் என்பது அனை வருக்கும் பொதுவானது. எனவே அடிப்படையான சட்டத்தை  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். சட்டக்கல்லூரி கட்டிடம் மட்டுமல்ல, எல்லாவிதமான அடிப்படை வசதிக ளோடு கல்லூரி கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் நோக்கம். அதே நேரத்தில் மாவட் டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி நிச்சயமாக அமைந்தாக வேண் டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். எனவே, வருகிற  காலங்களில் நிச்சயமாக எல்லா மாவட்டங்களிலும், ஒரு சட்டக் கல்லூரி இருப்பதற்கான வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டா லின் உருவாக்கி தருவார். பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய நீதிமன்றங் களையும் அமைத்து கொடுத்து, அதன் மூலமாக புதிய வழக்கறிஞர்களுக்கு பயிற்சி செய்வதற்கும், தொழில் பழகு வதற்கும், தொழில் நடத்துவதற்கான வாய்ப்பையும் உரு வாக்கி தந்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 15 அரசு சட்டக்கல்லூரிகள், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், திருச் சியில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என மொத்தம் 17 கல் லூரிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அது தவிர 9 தனி யார் கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் 700 பேர் மட்டும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது அனை வருக்கும் சட்டக்கல்வி கிடைக்ககூடிய அளவில் சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, நாமக் கல் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் அருண், நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, நவ.27- தமிழகத்திலேயே மிகப் பெரிய பட்டுக்கூடு ஏல அங் காடி தருமபுரியில் அமைந் துள்ளது. இந்த அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தின சரி 5 முதல் 8 டன் வரையி லான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் சனியன்று நடைபெற்ற ஏலத் தில், 47 விவசாயிகள் கொண்டு வந்த 4037 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.27.17 லட்சத்திற்கு ஏலம்  விடப்பட்டது. இதில் குறைந் தபட்சம் ரூ.525க்கும், அதிகபட் சமாக ரூ.745க்கும், சராசரி யாக 673 ரூபாய் என ஏலம் போனது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவ லர்கள் தெரிவித்துள்ளனர்.