districts

img

‘’என் சாவுக்கு பஜாஜ் பைனான்ஸ்தான் காரணம்’’

திருப்பூரில் தொழிலாளி தற்கொலை; உறவினர்கள் மறியல்

திருப்பூர், செப். 9 - திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்  கடனுக்கு அதிக வட்டி வசூலித்ததால், விரக்தி  அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசமடைந்த உற வினர்கள், பொது மக்கள் பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறிய லில் ஈடுபட்டனர். திருப்பூர் அங்கேரிபாளையம் மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் எல்.எஸ்.ஏ. ராஜேஷ் கண்ணன் (45). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணனின் மனைவி செல்வி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில், ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடனுக்கு மாதம் ரூ. 4700 வீதம் கடன் மற்றும் வட்டித் தொகை செலுத்தி வந்திருக்கிறார். இதுவரை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை செலுத்தி இருக் கின்றார். எனினும் அசல் தொகை, வட்டி  சேர்த்து இன்னும் ரூ.1 லட்சம் கட்ட வேண்டியி ருக்கிறது என்று பஜாஜ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணனும், செல்வியும் பஜாஜ் நிறுவனத்திற்குச் சென்று,  ரூ.1.70 லட்சம் செலுத்திய நிலையில் இன்னும்  எதற்கு ரூ.1லட்சம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுள்ளனர். எனினும்  அந்த நிறுவனத்தார்  கட்டாயம் இந்த தொகையை செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இந்த கடன் விவகாரத்தால் குடும்பத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந் துள்ளது. 

இதனால் மன விரக்தி அடைந்த ராஜேஷ் கண்ணன் திருப்பூர் ரயில் நிலையம் அருகே  புதனன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை  செய்து கொண்டார். மேலும் அவரது சட்டைப்  பையில், ஒரு கடிதம் இருந்ததை காவல் துறை யினர் கைப்பற்றினர்.  அதில், ‘எனது மனைவி பஜாஜில் லோன்  வாங்கி பணம் கட்ட முடியாததால் நான்  சாகிறேன். என் சாவுக்கு பஜாஜ் பைனான்ஸ் தான் காரணம்’. என எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சடலத்தை கைப் பற்றிய ரயில்வே போலீஸார் பிரேத பரி சோதனைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் இதற்கிடையே ராஜேஷ் கண்ணன் பஜாஜ்  பைனான்ஸ் கடன் காரணமாக தற்கொலை  செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத் திருந்த தகவல் பரவிய நிலையில் அவரது  உறவினர்கள், அப்பகுதி பொது மக்கள்  கோபாவேசம் அடைந்தனர். வியாழனன்று  மதியம் திருப்பூர்- அவிநாசி சாலை குமார்  நகரில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவ னத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். ராஜேஷ் கண்ணன் சாவுக்கு காரண மான அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த உடனடியாக திருப்பூர் மாநகர வடக்கு காவல் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில்  பஜாஜ் நிறுவனத்தின் மீது புகார்  அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.  இதுகுறித்து மறியலில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இருசக்கர வாகனக் கடன், தனிநபர் கடன் என எளிதில் கடன்  தருவதாக விளம்பரம் செய்து வாடிக்கை யாளர்களை தன் பக்கம் இழுக்கிறது. ஆனால்  கடன் கொடுத்த பிறகு அவர்கள் முன் கூட்டியே சொன்னதற்கு மாறாக அதிக வட்டி,  அபராதம், வட்டிக்கு மேல் வட்டி, வட்டியும்  குட்டி போட்டு வசூலிக்கும் ஏற்பாடுகள்  தான் நடைபெறுகிறது. தவணை தள்ளிப் போனால் குண்டர்களை ஏவி மிரட்டுவது  போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுகிறது. ஒரு நாள் தவனை தள்ளிப்போனாலும் ஏதோ  ஒரு காரணம் சொல்லி கூடுதல் தொகையை  பஜாஜ் நிறுவனத்தினர் வசூலிக்கின்றனர் என  பாதிக்கப்பட்டோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

;