districts

img

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர், மார்ச் 7- சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் உண் மைக்கு புறம்பானது. அவ்வாறு வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என வடமாநில தொழிலாளர்களுக்கு செவ் வாயன்று நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள் ளது. திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும்  பனியன் நிறுவனங்களில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வடக்கு  சரகம் காவல் துணை ஆணையர் அபிசேக் குப்தா அனுப்பர்பா ளையம், போயம்பாளையம், மும்மூர்த்தி நகர், மாஸ்கோந கர், பாலைகாடு, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமில் அனுப்பர்பாளையம் சர கம் உதவி ஆணையர் சி.நல்லசிவம், வேலம்பாளையம் ஆய் வாளர் தாமோதரன், வேலம்பாளையம் குற்றபிரிவு ஆய்வா ளர் டி.ராஜேஸ்வரி, அனுப்பர்பாளையம் துணை ஆய்வாளர்  கே.பிரேமா ஆகியோர் பங்கேற்றனர்.