உடுமலை, டிச.4- உடுமலையில், இல்லம் தேடி கல் வியின் நோக்கங் களை மக்களிடம் கொண்டு செல் லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல் பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கலைக்குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடுமலை தாலுகா உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற் றது. இதில் தலைமையசிரியர் மரியபுஷ்பம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.