districts

img

அவலாஞ்சி அணை 4 ஆவது முறையாக திறப்பு

உதகை, செப்.12- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், அவலாஞ்சி அணையிலிருந்து 4  ஆவது முறையாக தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் இங்குள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. ஏற்கனவே,  முழு கொள்ளளவை எட்டிய பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி அணைகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளி யேற்றப்பட்டது. இந்நிலையில், அவலாஞ்சி அணை அதன் மொத்த கொள்ளளவான 171  அடியை எட்டியது. தொடர்ந்து, விநாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அணையின் பாது காப்பு கருதி இரண்டு மதகுகளில் தலா  விநாடிக்கு 300 கனஅடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டது. இதேபோல் 89 அடி கொண்ட குந்தா அணையிலிருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

இதனால் குந்தா வருவாய்த்துறை சார் பில், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. பில்லூர் அணை திறப்பு இதேபோல் கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அணைக் கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் உயர துவங்கி அணையின் நீர்தேக்க உயரமான 100 அடியில் தற்போது நீர்மட்ட உய ரம் 97 அடியை நெருங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளதால், அணையின் பாது காப்பு கருதி அணையிலிருந்து அதன் நீர் வரத்தான விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானி யாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுவதால் ஆற்றின் வேகம் அதி கரித்துள்ளது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்தால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு மேலும் உயரும். இத னால் பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறு முகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக் குமாறு உள்ளூர் நிர்வாகம் சார்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

;