ஈரோடு வட்டம், ஈரோடு ஒன்றி யத்தில் உள்ளது பிச்சாண்டம் பாளையம் கிராமம். மலையும், மலை சார்ந்த இடமும் என்பதைப் போல பெரும் பாறையும், பள்ளமும் நிறைந்த பகுதி இங்கு உள்ளது. அரசு புறம்போக்கான இங்கு கூரபாளையம், புங்கம்பாடி, பிச் சாண்டம்பாளையம், முள்ளம்பட்டி போன்ற பகுதிகளில் வசித்த வீட்டு மனையில்லாத 137 குடும்பத்தின ருக்கு இலவச வீட்டுமனை வழங் கப்பட்டது. இக்குடியிருப்பிற்கான வரைபடம் உள்ளது. ஆனால் அதன் படி அனைவருக்கும் அளந்து வீட்டு மனைக்கான எல்லைக் கல் நடப்பட வில்லை. பாதை எதுவென காட்டப் படவில்லை. பொதுப்பயன்பாட் டிற்கான இடம் விடப்பட்டுள்ளதா எனவும் குறிப்பிடவில்லை. குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேற் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், 3 வீடுகள் முளைத் துள்ளன. 500 ச.அடி நிலத்தில் பிர தான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் இவை கட்டப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட் டத்தின் கீழ் கழிப்பிடமும் அமைக் கப்பட்டுள்ளது. ஓணான் முட்டை யிடும் காடு போன்ற அமைவிடத்தில் இரவு,பகலாக காவல் காத்து கட்டு மான பொருட்களைச் சேகரித்து, பாதுகாத்து, மிகவும் சிரமப்பட்டு கட்டுமானப் பணிகள் முடித்துள் ளனர். அலைந்து, திரிந்து இடத்தை வாங்கினர். அதில் சிரமப்பட்டு அரசு உதவியுடன் வீடும் கட்டினர். ஆனால் அந்த மூன்று குடும்பத்தினரும் இது வரை அந்த வீட்டுமனையில் குடி யேற முடியவில்லை. காரணம் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவை கள் எதுவும் எட்டிப்பார்க்கவில்லை என்பதே. விட்டுமனைக்கு 3 சென்ட் இடம் வேண்டும் என்பதும் ஒரு காரணம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற இம்மக்களின் நிலை மாற்றப்படுமா!