districts

img

பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

நாமக்கல், ஜூலை 7- அதிக வட்டி கேட்டு கூலி தொழி லாளி மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள கண்டிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் குமார். விசைத்தறி கூலி தொழி லாளி. இவர் பள்ளிபாளையம் பெரு மாள் மலைப்பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத் தில் ரூ.20 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கி உள்ளார். தான் பெற்ற பணத்திற்கான வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை முழுவதுமாக திரும்ப செலுத்தி உள்ளார். இதன்பின், தான் கொடுத்த அசல் ஆவணங்களை பெற நிறுவனத் தின் அதிபரான பாரதிய ஜனதா கட் சியின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி பிரிவு அமைப்பாளர் நாச்சி முத்துவிடம் ராம்குமார் கேட்டுள் ளார். இதற்கு ராம்குமார் பெற்ற ரூ.20 ஆயிரத்தை மீண்டும் செலுத் தினால் மட்டுமே அசல் ஆவணங் களை திரும்ப தரமுடியும் என  நாச்சிமுத்து கூறியதாக தெரிகிறது. இதற்கு ராம்குமார் எதிர்ப்பு தெரி வித்து கேள்வி கேட்டதால், நாச்சி முத்து தனது நிதி நிறுவனத்தில் பணி புரியும் அடியாட்களை கொண்டு கூலி தொழிலாளி ராம்குமாரை தாக்கியுள்ளார். இதனால் மயக்கு நிலைக்கு சென்ற ராம்குமாரை, அவருடைய மனைவி மற்றும் அக் கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு  பள்ளிபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். இதுகுறித்து ராம்குமார் அளித்த புகாரின் பேரில், பாஜக நிர்வாகி நாச்சிமுத்து மீது பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். அதிக வட்டிகேட்டு, விசைத்தறி தொழிலாளியான ராம் குமாரை அடியாட்களை வைத்து கடுமையாக தாக்கிய பாஜக நிர்வாகி நாச்சிமுத்துவை, கைது  செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை விசைத்தறி தொழிலாளர்கள் மத்தி யில் அழுத்தமாக எழுந்துள்ளது. மேலும், பாஜக நிர்வாகி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் தற் பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

;