districts

காவல் துறை துணையோடு திரிபுராவில் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்

கோவை, மார்ச் 11-  திரிபுராவில், மாநில போலீ சாரின் துணையோடு பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் திட்ட மிட்டு எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ் சாட்டினார். திரிபுராவில் எதிர்க்கட்சிகள் மீது  தாக்குதல் நடத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களை கண்டித்து கோவையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்த காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன் தலைமை ஏற்றார். இதில், சிபிஎம், சிபிஐ,  காங்கிரஸ், மதிமுக, விசிக உள் ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங் கேற்று உரையாற்றுகையில்,  திரிபுரா மாநில சட்டமன்ற தேர் தலில் பாசிச பாஜக 32 இடங்களில்  வெற்றிபெற்றுள்ளது,  அதற்கு முந் தைய தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை 12  சட்டமன்ற தொகுதிகளை  இடங் களை இழந்துள்ளது. மேலும், கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு களை காட்டிலும் இம்முறை 10 சத விகிதம் வாக்குகள் குறைந் துள்ளது. பாஜகவிற்கு பின்ன டைவை ஏற்படுத்திய இந்த தேர்தல்  முடிவுகளை கண்டு அதிர்ச்சிக் குள்ளாகியுள்ள இந்த பரிவா ரங்கள், வரும் காலங்களில் மேலும்,  கட்சி பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் திரிபுரா  மாநிலத்தில்,  எதிர்கட்சியினரை,  அவர்களின் வாழ்வாதரத்தை  பாதிக்கின்ற வகையில் தாக்கு தலை திட்டமிட்டு நடத்தி வருகின் றனர். இந்த கொடூர தாக்குதல் 34 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ள சிறிய மாநிலத்தில் 688 இடங் களில் தாக்குதல் நடந்துள்ளது.  இந்த இடங்களில் ஆளுநர் சென்று பார்வையிட மறுக்கிறார். மத்திய  பாதுகாப்பு படையினர் விளக்கி  கொள்ளப்பட்ட பிறகு,  மாநில  காவல்துறை உதவியோடு இந்த  தாக்குதல் நடத்தப்பட்டு வருகி றது. 

அகர்தலாவில் உள்ள  மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் இரண்டு தளங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அங் கிருந்த பொருட்களும் சூறையாடப் பட்டுள்ளன. அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு  கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட் டதோடு, கோமதி மாவட்டத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகம், மேற்கு திரிபுரா மாவட்டக்குழு அலுவலகம் உதயப்பூரில் உள்ள வட்டாரக்குழு அலுவலகம் உள் ளிட்ட பல அலுவலகங்களும் தீ வைப்பு சம்பவங்களால் பெரும்  சேதமடைந்துள்ளன. தேசர்கதா நாளிதழ் அலுவ லகம், 24 நியூஸ் சமூக ஊடக அலு வலகம் ஆகியவையும் தாக்கு தாக்கப்பட்டிருக்கிறது. திரிபுரா  மாநில மக்களின் ஒப்பற்ற தலைவ ராக விளங்கும் தசரத்தேவ் அவர் களின் சிலையும் உடைக்கப்பட்டி ருக்கிறது. ஆளுகின்ற பா.ஜக,  மற்ற மாநிலங்களில் தாங்கள் ஆட்சியை கைப்பற்ற முடிய வில்லை என்றால், ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியை செய்வார்கள் அப்படிதான், கர் நாடக,  மத்தியபிரதேசம் மாநிலங் களில் ஆட்சியை கைப்பற்றி னார்கள். ஜனநாயகத்தின் மீது  நம்பிக்கையற்று வன்முறை தாக்கு தலை கட்டவிழ்த்துவிடும் பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் ஒடுக்கி அடக்கிட ஒன்றினைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.  தற்போது, திரிபுரா மாநிலத்தில்  நடைபெற்ற வன்முறை சம்பவங் களை ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழு தலை வர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில், சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  திரிபுரா சென்றுள்ளது. இவர்கள் வன்முறை, தாக்குதல்கள் நடை பெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்து, பின்னர் அம்மாநில ஆளு நரை சந்தித்து விளக்க உள்ளனர் என்றார்.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.