districts

img

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: சாதியவாதிகளுக்கு எதிராக முழக்கம்

சேலம், ஜூன் 17- சிபிஎம் நெல்லை மாவட்டக் குழு அலுவலகம் மீதான தாக்கு தலை கண்டித்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட னர். திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம் பதி இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டக்குழு அலுவலகம் மீது  சாதியவாதிகள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனை கண்டித்து, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாதுகாப்பு  வழங்க வேண்டும். இச்சம்பவத்தில்  தொடர்புடைய அனைவர் மீதும்  கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக ஏற்காட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசௌந்தரி, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் டி.பழனிச்சாமி, எம். கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேச்சேரியில் ஒன்றியச் செயலாளர் ஜி.மணி முத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாது, பழனிசாமி, முத்துசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சேலம் கிழக்கு மாநகரக்குழு சார்பில், தாதகாப் பட்டி கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, கிழக்கு மாநகரச் செயலா ளர் பொன்.ரமணி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் வி.பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, கண் டன முழக்கங்களை எழுப்பினர். வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தாலுகா செயலாளர் வி.தங்க வேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர். பனமரத்துப்பட்டி சந்தைப் பேட்டை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஒன்றியச் செயலாளர் கே.ராஜாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோன்று தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் சி.நாக ராசன், சோ.அருச்சுணன், எஸ். கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, ஆர்.சின்னசாமி, தி. வ.தனுசன், விசிக நாடாளுமன்ற  தொகுதி செயலாளர் மு.கலைவா ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், சிபிஎம் நகரச் செயலா ளர் சி.முரளி நன்றி கூறினார்.