districts

img

தானமாய் பெறப்பட்ட எலும்பினை பயன்படுத்தி மூட்டு அறுவை சிகிச்சை

சேலம், மே 31- தானமாய் பெறப்பட்ட எழும் பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்து சேலம் மணிமா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். சேலம் மணிமா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் தீபக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீரி ழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தீபா (41) என்பவருக்கு நான்கு ஆண்டு காலமாக சிகிச்சை பெற்று  வருகிறார். கடந்த மூன்று மாதங்க ளாக சார்கோட் ஆர்த்ரோபதி என் னும் நோயினால் கணுக்காலில் உள்ள “டேலஸ்” என்னும் எலும்பு அழுகி நடக்க முடியாமல் அவதிப் பட்டு வந்தார். இந்த நோய்க்கு பல ஆண்டுகளாக கணுக்கால் வரை காலை அகற்றுவது மட்டும்தான் சிகிச்சை முறையாக இருந்து வந் தது. சில ஆண்டுகளாக அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றா மல் “இலிசாரோவ்” என்னும் வளை யக்கம் பிகலைப் பயன்படுத்தி நோயாளியின் இடுப்பு எலும்பு மற்றும் கால் எழும்பினை எடுத்து  அழுகிப்போன மூட்டிற்கு பதிலாக பொருத்தி அறுவை சிகிச்சை செய் யப்பட்டு வருகிறது. இதில் கம்பிக ளின் எடை அதிகமாக இருப்பதா லும், காலுக்கு வெளியே பொருத்து வதாலும் இடுப்பில் இருந்தும், காலில் இருந்தும் கூடுதல் அறுவை சிகிச்சை செய்து எலும்புகளை அகற்றும் நிலை இருந்து வந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவ திக்கு உள்ளானார்கள். இவை அனைத்தையும் தவிர்த்துவிட்டு சேலம் மாவட்டத்தி லேயே முதன் முறையாக மணிமா  மருத்துவமனையில் தானமாக பெற்ற ஆலோகிராஃப்ட் எலும்பு களைப் பொருத்தி எலும்புகளுக்கு உள்ளேயே (internal fixation angle Arthrodesis) என்னும் அறுவை சிகிச்சை மருத்துவர் கவின்குமார் மற்றும் அவரது குழு வினரால் வெற்றிகரமாக செய்யப் பட்டது. மேலும், அறுவை சிகிச்சை செய்து மூன்று வாரங்கள் கழித்த பிறகும் கூட எவ்வித நோய் தொற்று மற்றும் பின்விளைவுகள் ஏதுமின்றி நோயாளி நலமுடன் உள்ளார், என் றார்.

;