districts

இரவு 10 மணிக்கு மேல் கடும் குளிரில் சுமைதூக்க சொல்வதா?

உதகை, அக்.12- குன்னூரில் பகலில் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப் பதாக சுமைதூக்கும் தொழிலாளர் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம், குன்னூர் நக ராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய் கறி உட்பட 800க்கும் மேற்பட்ட கடை கள் செயல்பட்டு வருகின்றன. இந்த  கடைகளுக்கு பொருட்கள் சமவெளி பகுதியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. கடைக ளுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வி.பி.தெருவில் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் அந்தந்த கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களிலிருந்து ஏராளமான பொதுமக் கள் தினமும் மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க காவல் துறையி னர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் துள்ளனர். இதன்ஒருபகுதியாக வி.பி.தெருவில் பகலில் லாரிகள்  இயக்க போலீசார் தடை விதித்த னர்.

இரவு 10 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை மட்டும் லாரியில் இருந்து பொருட்கள், காய்கறிகளை இறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சுமைப்பணி தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளா வதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம தளத்தில் உள்ள மாவட்டங்களில் இது நடைமுறைக்கு ஒத்துவரும். ஆனால் மாலை 3 மணிக்கு பிறகே கடும் பணி, குளிர் எடுக்கும் நிலையில் இரவு 10 மணியில் இருந்து காலை 7  மணி வரை லாரிகளை நிறுத்தி சுமை களை இறக்குவது என்றால் இயலாத காரியம் என சுமைப்பணி தொழிலா ளர்கள் போலீசாருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர்.  மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள் ளதால், வாகனங்கள் செல்ல முடி யாத நிலை உள்ளது. எனவே, அந்த கடைகளை அப்புறப்படுத்தி லாரி களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் பாரம் இறக்குவது சிரமம். 100 தொழிலா ளர்கள் உள்ளோம். பகல் நேரத்தில் ஒரு லாரியை மட்டும் வி.பி.தெருவிற் குள் அனுமதித்தால் 2 அல்லது 3  பேருக்கு மட்டுமே வேலை இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறினர்.  அதற்கு போலீசார், நகராட்சி தான் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்றும், போலீ சார் போக்குவரத்தை மட்டுமே சரி செய்வார்கள் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் முறை யாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபட போவ தாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.