districts

4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை

சேலம், நவ.5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய தேர்விற்கு போலி சான்று கள் மூலம் விண்ணபித்த 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிசி) கடந்த 1995 ஆம் ஆண்டு உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் வேளாண்மை அதி காரிகள் பணிக்கு விண்ணப்பிக்க லாம் என்று அறிவிப்பை வெளியிட்டி ருந்தது. அப்போது மருத்துவர்கள் ராஜேந்திரன், கௌசல்யா, ராஜேந்திர குமார் ஆகியோர் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கும், லதா என்பவர் வேளாண்மை அதிகாரிகள் பணிக்கும் விண்ணப்பம் செய்துள்ள னர்.  இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் விண்ணப்பித்த ராஜேந்திரன், கவு சல்யா, ராஜேந்திரகுமார், லதா ஆகி யோர் சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிவதற்காக சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை ஆய்வு செய்தபோது போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து டிஎன்பிசி ஆணையத்திற்கு போலி சான்றிதழ் என்ற விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்பின் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர் வாணையம் இந்த போலி சான்றி தழ்கள் வழக்கை சிபிசிஐடி காவல் துறையிடம் அளித்தது. இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் எண் 4 நீதிமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந் தது. இந்த வழக்கில் சனியன்று அரசு வழக்கறிஞர் புனிதா மற்றும் சிபிசி ஐடி காவல் துறையினர் சாட்சியங் களை சமர்ப்பித்த நிலையில், தீர்ப்பு  வழங்கப்பட்டது. இதில், போலி சான் றிதழ் முறையீடு வழக்கில் ராஜேந்தி ரன், கவுசல்யா, ராஜேந்திரகுமார், லதா ஆகியோர் 4 பேருக்கும் நான்கு சட்டபிரிவின்கீழ் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.8 ஆயி ரம் அபராதமும் விதித்து நீதிபதி யுவ ராஜ் தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கு விசாரணை யில் கிராம வருவாய் அலுவலர் நாச்சி முத்து மற்றும் அலுவலக உதவியா ளர் சந்திரசேகர் ஆகிய இருவரும் 500க்கும் மேற்பட்ட  போலி சான்றி தழ்கள் தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இந்த வழக்கு விசாரணை துவங்கப்பட்டபோது நாச்சிமுத்து, சந்திரசேகர் ஆகிய இருவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். தற் போது போலி சான்றிதழ்கள் தொடர் பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட் சியர் அலுவலகங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.