சேலம், டிச.5- பழங்குடி மலைக் குறவன் சான்று கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் முறை யீட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வரும் மலைக்குறவன் பழங்குடி இனத்தை சார்ந்த மக்களுக்கு அர சின் நலத்திட்ட உதவிகளை பெறு வதற்கும், பள்ளிக் குழந்தைகள் கல்வி கற்றிடவும் பழங்குடி மலைக்குறவன் (ST) சான்று வழங் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில வருவாய் கோட்டாட்ட சியர்கள் இனச்சான்று கோரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத் திட காலந்தாழ்த்தி வந்தனர். இதை யடுத்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு எடுத்த செல்லப்பட் டது இதைத்தொடர்ந்து, உதகையி லுள்ள பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குனர் தலைமையில், மானு டவியல் துறை வல்லுனர்கள் குழு, ஆத்தூர் வருவாய் கோட்டத்திற் குட்பட்ட பழங்குடி மலைக்குற வன் இனத்தவர்களின் கலாச்சாரம் பண்பாடு குறித்து தள விசா ரணை செய்து ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது.
இதன் அடிப்ப டையில், 2018-19ம் ஆண்டு களில் 200-க்கு மேற்பட்ட மலைக் குறவன் மக்களுக்கு பழங்குடி (ST) இனச்சான்று வழங்கப்பட் டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 2019-20-ம் ஆண்டுகளில் சுமார் 190 மனுக்கள் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் அளிக்கப் பட்டு, ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், கெங்கவல்லி ஆகிய வட்டாட்சியர்களிடம் விசாரணைக்கு அனுப்பப்பட் டது. விசாரணை முடித்து, வட்டாட்சியர்கள் அலுவலகத் திலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நிலுவையில் உள்ளது. மேற்படி ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் 2 முறை நேரில் சென்று இன சான்று வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டும் எவ்வித நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் கடந்த சனியன்று (டிச.4) சேலம் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்து முறை யிடப்பட்டது. அப்போது, பழங் குடி மலைக்குறவன் சாதிசான்று வழங்கிட மேற்படி ஆத்தூர் வரு வாய் கோட்டாட்சியருக்கு ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். முன்னதாக, இந்த மனுவினை அளிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் குணசேகரன், மலைக் குறவன் பழங்குடி சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் தனபால், ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.