districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

டிடிஎப் வாசன் நீதிமன்றத்தில் சரண்

கோவை, செப்.27- உயிருக்கு ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிய டிடிஎப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரண்  அடைந்தார். இதையடுத்து நீதிமன்றத்திலிருந்த வாசன் இரண்டு நபர்களின் உத்தரவாதத்தை அளித்த பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிடிஎப் வாசன்  என்பவர் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து ஆபத்தான வகையில் வாக னத்தை ஓட்டி  வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில், திங்களன்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு சரணடைந்தார். இரண்டு நபர்களின் உத்தர வாதம் கொடுத்த பின் மாலையில் அவர் பிணையில் விடு விக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் சரணடைந்த  நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட  வழக்கில் வருகின்ற வெள்ளியன்று டிடிஎப் வாசன்  ஆஜராக இருப்பதாக காவல்துறை வட்டாரம்  தகவல் கூறப்படுகிறது.

கட்சி விரோத நடவடிக்கை மார்க்சிஸ்ட் கட்சியிருந்து நீக்கம்

திருப்பூர், செப்.27- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டோரை மார்க்சிஸ்ட்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்து சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு அறிக்கை விடுத் துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்த சி.சுப்பிரமணியம், என்.கிருஷ்ணசாமி, சின்னவீரம்பட்டி ராஜேந்திரன், வெஞ்ச மடை திருமலைசாமி, செல்லப்பம்பாளையம் பழனிசாமி ஆகி யோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயருக்கு களங் கம் விளைவிக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு எந்த வித தொடர்பும் கட்சியின் அணிகள் வைத்துக் கொள்ள வேண்டாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி கூடலூர் வருகை: பலத்த பாதுகாப்பு

உதகை, செப்.27- காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் பாத யாத்திரையின் ஒருபகுதியாக நாளை (வியாழனன்று) ராகுல்காந்தி கூடலூர் வருகிறார். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி., நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த செப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். செப்.11 ஆம் தேதி கேரளாவிற்கு சென்றார்.  இந்நிலையில், செவ்வாயன்று மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, நாளை (வியாழனன்று) மீண்டும் தமிழகம் வருகிறார். கேரளா மாநிலம், நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கின்றனர். இதையடுத்து ராகுல்காந்தி கோழிப்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோ-ஆப்டெக்ஸில் ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு

தருமபுரி, செப்.27- தருமபுரி மற்றும் அரூர் கோ-ஆப்டெக் ஸில் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.  தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபா வளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா  நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி விற்பனையைத் தொடக்கி வைத்து பேசுகையில், தீபாவளி பண்டி கையையொட்டி, தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடு முறை நாள்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற் பனை நிலையங்கள் செயல்படும். அனை வரும் கைத்தறி துணிகளை வாங்கி நெச வாளர்களுக்கு உதவ வேண்டும்.  கடந்த ஆண்டு-2021 தீபாவளி பண்டிகை யையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள  தருமபுரி, அரூர் ஆகிய 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் மொத்தம் ரூ.95.21 லட்சம் மதிப்பில் ஜவுளிகள் விற் பனை செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு தருமபுரி மாவட்டத் தில் உள்ள தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல் லிக்கனி பட்டு மாளிகைக்கு ரூ. 2 கோடி மற்றும் அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ. 20 லட்சம் என 2 விற்பனை நிலையங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.2.20 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி யாக அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவிகித வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே,  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அனைத்து தரப்பினரும் ஆடைகளை வாங்கி  தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  இந்நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டல மேலாளர் சு.காங்கேயவேலு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஜெயக் குமார், தருமபுரி வட்டாட்சியர் தன.ராஜ ராஜன், நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளர்கள் எல்.ரெஜினா, கு.சுதாகர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாய குறைத்தீர்க்கும் கூட்டம்

நாமக்கல், செப்.27- நாமக்கல் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப்.30) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு  பாஜக நிர்வாகி கைது

தாராபுரம், செப்.27- சமூக வலைதளத்திதல் அவதூறு பரப்பிய பாஜக தக வல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட் டுள்ளார்.  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாஜகவின் தெற்கு  மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்தவர் வினித் குமார் (24). இவர், தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறையை பற்றி அவ தூறு பரப்பியதற்காக திங்களன்று இரவு கைது செய்யப் பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கர்ப்பவதிகள் பயன்பெற பதிவு எண் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர்

ஈரோடு, செப்.27- தமிழகத்தில் மருத்துவ திட்டப்பணிகளில் கர்ப்பகால பதிவு எண் சுயமாக பதிவு செய்திட்டு தரமான மருத்துவம் மற்றும் கர்ப்ப கால சேவைகள் பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கர்ப்ப பதிவு எண் என்பது  கருவுற்ற பெண்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் வழங் கப்படும் அடையாள எண் ஆகும். இந்த எண்ணை பெறுவதன் மூலம் கர்ப்பிணி பெண் கர்ப்பகால சேவைகளை எல்லா  மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொள்ள இயலும். இந்த எண்ணை பெறுவதன் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தரமான மருத்துவம் கர்ப்ப கால சேவைகள் மற்றும் பிரசவ கால சேவைகள், பிரசவ பிற் கால சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும். மேலும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத் தின் கீழ் கர்ப்பகால பண உதவி பெற, குழந்தை பிறப்பை பதிவு செய்ய இந்த எண் மிகவும் அவசியமானது. எனவே, கர்ப்ப  பதிவு எண் சுயமாக பதிவு செய்ய http://picme.tn.gov.in என்ற இணையதள மென்பொருள் சேவைக்குள் கூகுள் வழி யாக செல்லவும். picme என்பதை கிளிக் செய்யவும். பின்பு உங்கள் ஆதார் எண்ணை பதிவிடவும். ஆதாரின்படி உங்கள்  பெயரை பதிவிடவும். பின் ஆதார் நகலை பதிவேற்றவும். கர்ப்ப பதிவு எண் மென்பொருளில் தங்களுடைய பொதுவான தகவல்கள், கைபேசி எண், கல்வித் தகுதி, முந்தைய பிறப்பு குறித்த தகவல்கள், தற்போதைய உடல்நிலை குறித்த தக வல்களை பதிவேற்றம் செய்தபின் வரும் கடவுச்சொல்லை உறுதி செய்து சுயமாக கர்ப்ப பதிவு எண் பெறலாம். இவ்வாறு கர்ப்ப பதிவு எண் பெற தாங்களாகவே மேற் கண்ட முறையை பயன்படுத்தி கர்ப்ப பதிவு எண் பெற்று  அனைத்து சேவைகள் மற்றும் பயன்களையும் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள் ளார்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கோவை, செப்.27- சிறுமுகையில் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட தக ராறு காரணமாக மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (32). இவரது மனைவி சரண்யா (29). இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி  3 குழந்தை கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சரண்யா கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இதனால் விரக்தியடைந்த சரண்யா வீட்டிலி ருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து  கொண்டார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து சரண்யாயை மீட்டனர். இதன்பின் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்து வனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறு முகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னூர் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் - போலீசார் வழக்குப்பதிவு

கோவை, செப். 27 -  அன்னூர் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழந்த விவ காரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஊத்துப் பாளையம் கிராமத்தை சேர்ந்த  விக்னேஷ்வரன் என்பவரது மனைவி வான்மதி நிறைமாத கர்ப்பிணி என்பதால் பிரசவத் திற்கு அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாரான நிலையில் திடீரென மின்தடை ஏற் பட்டுள்ளது.  ஜெனரெட்டரும் வேலை செய்யாததால் மருத்து வர்கள் என்ன செய்வது என தெரியாமல் அருகில் இருந்த தனி யார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கோவில் பாளையம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வான்மதி ஆண் குழந்தை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வான்மதி குடும்பத்தினர் அன்னூர் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தனது மனைவி உயிரிழப்புக்கு அன் னூர் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் காரணம் என உயிரிழந்த வான்மதி யின் கணவர் விக்னேஸ்வரன்  கோவில் பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தற்போது சந்தேக மரணம் உட்பட  இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

வாலிபர் தற்கொலை

கோவை, செப்.27- அன்னூரை அடுத்த செல் லப்பம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் அருண் குமார் (23). எலக்ட்ரீசிய னான இவருக்கு கடந்த 12  வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் அதற்காக சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் குணமடையவில்லை. இத னால் அவர் மனவேதனையு டன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில், வேலைக்கு செல்வ தாகக்கூறி சென்று, செல் லப்பம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து அன்னூர் தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்து அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

மழையால் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்

தருமபுரி, செப்.27- கனமழை, சூறைக்காற்றால் சேதம டைந்த பள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ரூ.19 லட்சத்தில் புதிய  கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி ஊராட் சிக்குட்பட்ட பள்ளம்பட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது இக் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற் கூரை சேதமடைந்தது. இதனால் பள்ளி  கட்டிடத்தில் மாணவர்கள் தொடர்ந்து படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளம்பட்டி கிரா மத்தில் செயல்பட்டு வரும் அங்கன் வாடி மையத்தில் தொடக்கப்பள்ளியை செயல்படுத்த அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.  அதனைத்தொடர்ந்து அங்காடி மையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி வகுப்புகள் நடைபெற்று வரு கிறது. அங்கன்வாடி மையமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் ஒரே கட்டி டத்தில் இயங்குவதால் இடநெருக்கடி காரணமாக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இத னால் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாண வர்களுக்கு கிராமத்தில் உள்ள மாரி யம்மன் கோவில் வளாகத்தில் வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந் நிலையில், ஆட்சியர் சாந்தி கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பள்ளி  கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை பொக் லைன் எந்திரம் மூலம் இடித்து அப் புறப்படுத்தும் பணி நடைபெற்றது.  இதுகுறித்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கூறு கையில், பள்ளம்பட்டி பள்ளி சேதமான தால் அதற்கு பதிலாக ரூ.19.10 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள் ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயா ரித்து அரசின் ஒப்புதலுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிதியை செந்தில் குமார் எம்.பி.யிடம் கோரப்பட்டு உள் ளது. இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்க பெற்ற வுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கோவை, செப்.27- தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் சிரமத்தை  தவிர்க்கும் வகையில் பொள்ளாச்சியில் கூடுதல் பேருந்து கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும்  புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர்  மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்க ளிலும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடு தல் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையே, வரும் செப்.30 ஆம் தேதியுடன் பள்ளி காலாண்டு தேர்வு நிறைவ டைந்து, அக்.1 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படு கிறது. மேலும், அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பண்டிகை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் செப்.30 ஆம் தேதி முதல் அக்.5 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களும் வழக்கம் போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடு தல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, உதகை உள்ளிட்ட  பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வால்பாறையில் வசிக் கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங் களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பண்டிகையை யொட்டி வால்பாறைக்கு அக்.2 ஆம் தேதி முதல் அக்.5  ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

;