districts

img

திருப்பூரில் வாலிபர் சங்கத்தினர் போதை எதிர்ப்பு பிரச்சாரம்

திருப்பூர், செப். 25 - மாவீரன் பகத்சிங்கின் 115 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதை  எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடத் தினர். இதன் ஒரு பகுதியாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வாலிபர் சங்க  பெயர் பலகை திறப்பு விழாவும் நடை பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் பகத்சிங்கின் 115  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு  வாலிபர் சங்கத்தினர் திருப்பூரில் போதை எதிர்ப்பு பிரச்சார இயக் கத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்  சாலை பாரப்பாளையம் பகுதியில வாலிபர்களின் இந்த பிரச்சார இயக்கம் தொடங்கியது. முன்ன தாக விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மன் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சிங்கார வேலன், மாநில பொருளாளர்  கே.எஸ்.பாரதி ஆகியோர் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தனர். வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர தலைவர் எஸ். கண்ணன், செயலாளர் விவேக் ஆகி யோர் தலைமையில் இருசக்கர வாகனங்களில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

பாரப்பாளையம், கருமாராம் பாளையம், கோல்டன் நகர், கவுண்ட நாயக்கன்பாளையம், பாப்பநாயக் கன்பாளையம், முத்து நகர், என் ஆர் கே புரம், பிரிட்ஜ் வே காலனி, ரங்க நாதபுரம், ஏ.கே.ஜி நகர், எம்.எஸ். நகர், அம்பேத்கர் காலனி, ஜே.பி. நகர், நெசவாளர் காலனி, திருமலை  நகர், எஸ்வி காலனி, ராமையா காலனி, ராமமூர்த்தி நகர், அண்ணா  காலனி, பத்மாவதிபுரம், மருதாசல புரம் ஆகிய இடங்களில் வாலிபர் சங்கத்தின் பெயர் பலகை திறந்து வைத்து சங்கத்தின் கொடியை ஏற்றி  வைத்தனர். அதேபோல் குமரனந்தபுரம்  வடக்கு, கிழக்கு, தெற்கு, தியாகி  பழனிச்சாமி நகர், வ உ சி நகர், ராஜீவ்  நகர், எம்ஜிஆர் நகர், குலாம் காதர்  லேஅவுட், கொங்கணகிரி, சரளைக் காடு, முருகப்பாளையம், ஓடக்காடு,  காலேஜ் ரோடு ஆகிய இடங்களில் கொடியேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா  நடைபெற்றது. இறுதியாக வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழு  அலுவலகம் முன்பாக இந்த போதை  எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது. தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வை நாசப் படுத்துவதுடன், உழைப்பாளி குடும் பங்களை சீரழித்துக் கொண்டி ருக்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. இதில், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.அருள்,  மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், முன்னாள் மாநில தலை வரும், மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளருமான செ. முத்துக்கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் வை.ஆனந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன் உள்பட அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகள் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.

;